பெங்களூரில் கட்சியின் புதிய அலுவலகத்திற்கு ரகசியமாக பூஜை நடத்திய தேவே கவுடா
பெங்களூர்: பெங்களூரில் மதச்சார்பற்ற ஜனதாதள கட்சிக்கு புதிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்காக ரகசியமாக பூஜை நடத்தியுள்ளார் அக்கட்சியின் நிறுவனரும், முன்னாள் பிரதமருமான தேவே கவுடா.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் முக்கிய இடத்தில் மதச்சார்பற்ற ஜனதாதள கட்சி அலுவலகம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் கர்நாடக அரசு அந்த கட்டிடத்தை விட்டு வெளியேறுமாறு அக்கட்சிக்கு உத்தரவிட்டு அவர்களை வெளியேற்றியது.

இந்நிலையில் பெங்களூரில் அந்த கட்சிக்கு புதிய அலுவலகம் கட்ட இன்று அதிகாலை ரகசிய பூஜை நடந்துள்ளது. மதச்சார்பற்ற ஜனதாதள நிறுவனரும், முன்னாள் பிரதமருமான தேவே கவுடா இந்த பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தார். பூஜையில் அவரது மகனும், முன்னாள் அமைச்சருமான ஹெச்.டி. ரேவண்ணா கலந்து கொண்டார். ஆனால் தேவே கவுடாவின் மற்றொரு மகனும், முன்னாள் கர்நாடக முதல்வருமான குமாரசாமி கலந்து கொள்ளவில்லை.
ஜோதிடத்தின் மீது நம்பிக்கை உள்ள தேவே கவுடா தனது ஆஸ்தான ஜோதிரடர்களின் அறிவுரைப்படியே இந்த பூஜையை நடத்தியுள்ளார். புதிய கட்டிடத்திற்கு ஜே.பி. பவன் என்று பெயர் வைக்க உள்ளார்கள்.
தேவே கவுடா ஜெயபிரகாஷ் நாராயணனின் தீவிர ஆதரவாளர் ஆவார். அதனால் அவர் நினைவாக கட்டிடத்திற்கு ஜே.பி. பவன் என்று பெயர் வைக்கிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications