பிரகாஷ்ராஜை கொல்ல திட்டமிட்டோம்.. போலீஸ் பிடித்துவிட்டது.. கவுரி லங்கேஷ் கொலையாளி வாக்குமூலம்
பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷை கொலை செய்த குற்றவாளிகள் நடிகர் பிரகாஷ்ராஜையும் கொலை செய்ய திட்டமிட்டது, விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Recommended Video

பெங்களூர்: பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷை கொலை செய்த குற்றவாளிகள் நடிகர் பிரகாஷ்ராஜையும் கொலை செய்ய திட்டமிட்டது, விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதி கவுரி லங்கேஷ் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். கர்நாடகாவில் ''பத்திரிக்கா" என்ற பெயரில் பத்திரிக்கை நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ்.
தனது பத்திரிக்கையில் வலது சாரிகள் குறித்தும், ஆர்.எஸ்.எஸ், பாஜக குறித்தும் அடிக்கடி கட்டுரைகள் எழுதி வந்தார். இதனால் அவர் கொல்லப்பட்டார். இது குறித்து பிரகாஷ்ராஜ் கருத்து தெரிவித்து இருந்தார்.

பிரகாஷ் ராஜ் கருத்து
இந்த கொலை குறித்து தொடக்கத்தில் இருந்து தைரியமாக பேசியவர்களின் பிரகாஷ்ராஜ் முக்கியமானவர். இந்துத்துவா அமைப்புகள்தான் கொலையை அரங்கேற்றி இருக்கிறது என்று கூறினார். இவர் கவுரி லங்கேஷுக்கு நெருங்கிய நண்பர் ஆவார். இவர் மோடி குறித்து தைரியாமாக பேசினார்.

கைதானார்கள்
இந்த கொலை வழக்கில் இந்து யுவ சேனா அமைப்பை சேர்ந்த முக்கியமான நிர்வாகியான கே டி நவீன் குமார் கைது செய்யப்பட்டார். கே டி நவீன் குமார் தன்னுடைய கொலை குற்றத்தை ஒப்புக்கொண்டார். இந்த கொலையில் பரசுராம் வாக்மோர் என்ற தீவிரவாதியை விஜயபுரா மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர். பரசுராமிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளான்.

திட்டம்
அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், பிரகாஷ்ராஜை கொலை செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள். அதன்படி பிரகாஷ் மோடிக்கு எதிராக அதிகமாக பேசினார். கொலை நடந்ததில் இருந்தே அவர், இந்துத்துவாவிற்கு எதிராக பேசினார். இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டோம். ஆனால் கடைசியில் போலீஸ் எங்களை பிடித்துவிட்டது என்றுள்ளான்.
|
பிரகாஷ்ராஜ் டிவிட்
இதுகுறித்து பிரகாஷ்ராஜ் டிவிட் செய்துள்ளார். அதில் '' எதிர்க்கும் குரல்களை ஒடுக்க திட்டமிடுகிறார்கள். என்னுடைய குரல் இன்னும் வலுப்பெறும். இவ்வளவு வெறுப்பரசியலை செய்துவிட்டு நீங்கள் தப்பிக்கமுடியும் என்று நினைக்கிறீர்களா'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications