மார்பகங்களை தொடுவதோ.. பெண்ணின் உடைகளை களைவதோ பலாத்கார முயற்சி அல்ல.. அலகாபாத் கோர்ட் ஷாக்
அலகாபாத்: பெண் ஒருவரின் மார்பகங்களை தொடுவதோ.. அவரின் பைஜாமா, கால்சட்டையின் நாடாவை அவிழ்ப்பதோ பலாத்கார முயற்சியாக கருதப்படாது என்று அலகாபாத் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. இரண்டு ஆண்களுக்கு எதிராக பதியப்பட்ட வழக்கு ஒன்றில் குற்றச்சாட்டை நீக்கும்படி தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் அலகாபாத் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
ஒரு நபர் பலாத்கார முயற்சி மேற்கொண்டுள்ளார் என்ற குற்றச்சாட்டை உறுதி செய்ய.. அதற்கு ஏற்றபடி சம்பவங்கள் நடந்து இருக்க வேண்டும். அது பலாத்கார முயற்சி என்று சொல்லும் அளவிற்கு உறுதியான சம்பவங்கள் நடந்திருக்க வேண்டும்.

அதை விசாரணை தரப்பு உறுதியாக நிறுவ வேண்டும். பலாத்கார முயற்சி என்ற குற்றத்தை செய்வதற்கும், அதற்கு தயாராவதற்கும் இடையே வேறுபாடுகள் உள்ளன. அந்த வேறுபாட்டை விசாரணையில் கருத்தில் கொள்ள வேண்டும். அதாவது பலாத்கார முயற்சி என்பது வேறு. அந்த முயற்சிக்கு தயார் ஆவது என்பது வேறு. இதை கருத்தில் கொண்டே வழக்குகளை பதிய வேண்டும்.
பெண்களின், சிறுமிகளின் மார்பகங்களைப் பிடிப்பது, பைஜாமாவை அவிழ்ப்பது, அல்லது அந்த பெண்ணை, சிறுமியை மறைவான இடத்திற்கு கட்டாயமாக இழுத்து செல்வது பலாத்காரம் அல்லது பலாத்கார முயற்சி ஆகாது. அதை பலாத்கார முயற்சி என்று குற்றஞ்சாட்ட முடியாது என்று அலகாபாத் கோர்ட் கூறி உள்ளது.
குற்றவாளிகள் மீதான வழக்கு
இரண்டு ஆண்களுக்கு எதிராக பதியப்பட்ட வழக்கு ஒன்றில் குற்றச்சாட்டை நீக்கும்படி தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் அலகாபாத் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
குற்றஞ்சாட்டப்பவர்களான பவன் மற்றும் ஆகாஷ் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 376 பலாத்காரம் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் பிரிவு 18 இன் வழக்கு பதியப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறுமி ஒருவருக்கு லிப்ட் கொடுத்து பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவத்தில் இந்த வழக்கு பதியப்பட்டது. அந்த சிறுமியை பைக்கில் ஏற்றி அதன்பின் பாலம் ஒன்றிற்கு கீழ் கொண்டு சென்று பலாத்காரம் செய்ய முயன்று உள்ளனர்.
பலாத்காரம் செய்யும் முன் அந்த வழியாக சென்ற நபர்கள் மூலம் அந்த சிறுமி காப்பாற்றப்பட்டார். சிறுமியின் மார்பகத்தை தொட்டு, உடையை அவிழ்க்க முயன்று உள்ளனர். ஆனால் அதற்கு முன் அந்த சிறுமி காப்பாற்றப்பட்டார். 2021ல் நடந்த இந்த சம்பவத்தில்தான் தற்போது அலகாபாத் கோர்ட் அதிர்ச்சி தரும் உத்தரவை பிறப்பித்துள்ளது.
குற்றம்சாட்டப்பட்ட நபர்கள்.. குற்றத்தை செய்யவில்லை. குற்றம் செய்வதற்காக தயார் ஆகி வந்தனர். அதனால் அது குற்றம் ஆகாது. இதில் வழக்கு பிரிவு 354 and 354(b) மட்டுமே பதியலாம். அதற்கு மேல் இதற்கு வழக்கு பதிய ஒன்னும் இல்லை. அதாவது இதை தாக்குதல் முயற்சியாக கருதலாம். ஆனால் பலாத்கார முயற்சி என்று கருத முடியாது என்று வாதம் வைத்தனர்.
இந்த வாதத்தை கோர்ட் ஏற்றுக்கொண்டது. இதில்தான் பெண் ஒருவரின் மார்பகங்களை தொடுவதோ.. அவரின் பைஜாமா, கால்சட்டையின் நாடாவை அவிழ்ப்பதோ பலாத்கார முயற்சியாக கருதப்படாது என்று அலகாபாத் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. பலாத்காரத்திற்கு முன்பே அது தடுக்கப்பட்டதால் பலாத்கார முயற்சி என்ற குற்றத்தை செய்வதற்கும், அதற்கு தயாராவதற்கும் இடையே வேறுபாடுகள் உள்ளன. இந்த பலாத்கார முயற்சி நடந்ததாக உறுதியாக நிரூபிக்கப்படவில்லை என்று கோர்ட் இதில் கூறி.. இதில் வழக்கு பிரிவு 354 and 354(b) மட்டுமே பதியலாம்... போஸ்கோ பதிய வேண்டியது இல்லை என்று கோர்ட் கூறி உள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications