6 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தாத்தா உள்பட இருவர்.. சமோசா வாங்கி கொள்ள ரூ 20 கொடுத்த கொடூரம்!
போபால்: போபாலில் 6 வயது சிறுமி அவரது தாய் வழி தாத்தா மற்றும் மற்றொரு நபரால் தனது 3 வயது தம்பியின் கண் முன்னே பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் கோலார் பகுதியைச் சேர்ந்தவர் 50 வயது முதியவர். இவர் தனது மகள் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 6 வயதில் ஒரு பேத்தியும் 3 வயதில் ஒரு பேரனும் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 8 நாட்களுக்கு முன்பு அந்த சிறுமியை வீட்டிலிருந்த ஒரு தனி அறைக்கு சஞ்சய் (38) என்பவர் சமோசா கொடுப்பதாக கூறி அழைத்துச் சென்றுள்ளார்.

3 வயது சகோதரன்
அந்த அறையில் ஏற்கெனவே அந்த சிறுமியின் தாத்தாவும், அவரது 3 வயது சகோதரனும் இருந்துள்ளனர். அந்த 3 வயது சகோதரன் கண் முன் அந்த சிறுமியை தாத்தாவும் சஞ்சயும் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். அப்போது சிறுமிக்கு ரத்தபோக்கு ஏற்படவே அவரை விட்டுவிட்டனர்.

சமோசா
பின்னர் அவரிடம் ரூ 20 கொடுத்து சமோசா வாங்கிக் கொள்ளுமாறு கூறியுள்ளனர். அது போல் அந்த விஷயத்தை யாரிடமும் சொல்லக் கூடாது என மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை யாரிடமும் சொல்லவில்லை.

சிறுமி
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சிறுமிக்கு வயிறு வலிப்பதாக கூறி வந்துள்ளார். சிறுமியின் நடவடிக்கையில் மாற்றங்கள் தெரிந்தன. இதை கவனித்த தாய் சிறுமியிடம் என்ன நடந்தது என கேட்டுள்ளார். ஆனால் அவர் ஒன்றும் சொல்லவில்லை.

அதிர்ச்சி அடைந்த தாய்
இதையடுத்து ரத்த கறை படிந்த ஆடைகளை கடந்த வியாழக்கிழமை அந்த சிறுமியே துவைத்ததை பார்த்த அவரது தாய் சிறுமியிடம் மீண்டும் துருவி துருவி கேட்ட போது நடந்ததை கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

வேலைக்கு சென்ற பெற்றோர்
இதையடுத்து 50 வயது தாத்தாவையும் சஞ்சய்யையும் போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் சம்பவத் தினத்தன்று இருவரும் குடித்திருந்தது தெரியவந்தது. சிறுமியின் பெற்றோர் கூலி வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் இருவரும் வேலைக்கு சென்றவுடன் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா?












Click it and Unblock the Notifications