For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜிஎஸ்டி.. கிரிக்கெட் டிக்கெட் கட்டணமும் உயருகிறது

ஜி.எஸ்.டி நாடு முழுவதும் நாளை அமலுக்கு வரும் நிலையில், கிரிக்கெட் போட்டிகளை காண்பதற்கான டிக்கெட் கட்டணங்களும் உயர்த்தப்படுகிறது.

By Devarajan
Google Oneindia Tamil News

பெங்களூரு: ஒரே நாடு ஒரே வரி என்ற நோக்கோடு மத்திய பாஜக அரசு இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு கொண்டு வரும் ஜிஎஸ்டி வரியால் கிரிக்கெட் போட்டிகளின் டிக்கெட்டு விலையும் உயர்த்தப்படுகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

எல்லா பொழுது போக்கு அம்சங்களுக்கும் சேவை வரி உயர்த்தப்படுகிறது. இதன்மூலம் விளையாட்டு போட்டிகளை மைதானத்துக்கு சென்று பார்க்கும் டிக்கெட் கட்டணமும் உயருகிறது. அனைத்து அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு அமைப்புகள் நடத்தும் போட்டிக்கான கட்டணங்கள் உயர்த்தப்படுகிறது.

GST: Watching Cricket matches in stadium will be costlier

இதில் இந்திய கிரிக்கெட் வாரியம், ஹாக்கி பெடரேசன் போன்ற அமைப்புகள் அடங்கும். இதன்மூலம் மைதானத்துக்கு சென்று கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்கான டிக்கெட்க்கு 18 முதல் 28 சதவீதம் வரை ஜி.எஸ்.டி விதிக்கப்படுகிறது.

அதிக வருவாய் ஈட்டும் ஐ.பி.எல். போட்டிக்கு 28 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று தெரிகிறது. ரூ. 250-க்கு கீழ் உள்ள டிக்கெட்டுகளுக்கு விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. மற்ற விளையாட்டு போட்டி டிக்கெட்டுகளுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது.

English summary
Goods and Services Tax Watching Cricket matches in stadium will be costlier.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X