பெட்ரூமில் தெருநாய்களுடன் நெருக்கம் காட்டிய மனைவி.. விவாகரத்து கோரிய கணவன்.. வினோத வழக்கு
அகமதாபாத்: தெருநாய்களை பெண் ஒருவர் தனது வீட்டு பெட்ரூமுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அந்த தெருநாய், அந்த பெண்ணின் கணவரை கடித்துள்ளது. அதுமட்டுமின்றி தெருநாய்களுக்கு சுவையான உணவுகளை சமைத்து வழங்க வேண்டும் என்று கணவருக்கு தொல்லை கொடுத்துள்ளார். இதனால் மனம் நொந்துபோன அந்த கணவர் விவாகரத்து கோரி உயர்நீதிமன்றத்தை நாடியுள்ள சம்பவம் நடந்துள்ளது.
குஜராத்தை சேர்ந்தவர் 41 வயது ஆண். இவருக்கு கடந்த 2006ம் ஆண்டில் திருமணம் நடந்தது. முதலில் அவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ தொடங்கினர். ஆனால் சில ஆண்டுகளுக்கு பிறகு இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட தொடங்கியது. இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம் தெருநாய்கள் தான்.

அதாவது அவரது மனைவி தெருநாய்கள் மீது அதிகமான அன்பை காட்டி வந்துள்ளார். தெருவில் நாய்களை பார்த்தால் பிஸ்கட் கொடுப்பது, வீட்டுக்கு தெருநாயை அழைத்து வந்து உணவு கொடுப்பது உள்ளிட்டவற்றை அவர் செய்து வந்துள்ளார்.
ஆனால் ஒரு கட்டத்தில் அவரது செயல் எல்லை மீறியது. தெருநாய்களை வீட்டுக்குள் இன்னும் சொல்லப்போனால் பெட்ரூம் வரை அழைத்து சென்றுள்ளார். தெருநாய்கள் மெத்தையில் படுத்தன. அதோடு தெருநாய்களுக்கு சுவையான உணவுகளை சமைத்து கொடுத்தார். அவர்கள் வசிக்கும் குடியிருப்பில் தெருநாய் மற்றும் செல்லமாக நாய்கள் வளர்க்க அனுமதியில்லை. ஆனால் அதனை மீறி அவர் நடந்து கொண்டார்.
இதனால் அக்கம்பக்கத்தில் அவரது கணவரிடம் புகாரளித்தனர். அதேபோல் கணவரும் தனது மனைவி தெருநாய்கள் மீது அன்பு காட்டுவதை விரும்பவில்லை. இதனால் அவர் தனது மனைவியை கண்டித்துள்ளார். தெருநாய்களை வீட்டுக்குள் அழைத்து வரக்கூடாது என்று என்று கூறியுள்ளார். ஆனால் மனைவி கேட்கவில்லை. தனது செயலை மாற்றி கொள்ளவே இல்லை.
இதனால் கணவர் மனம் உடைந்து போனார். ஒருபக்கம் மனைவி தெருநாய்களை வீட்டுக்கு அழைத்து வருவது பிடிக்காத நிலையில் இன்னொரு பக்கம் அக்கம்பக்கத்தினர் அவரை திட்டி வந்தனர். இதனால் செய்வதறியாது அந்த கணவர் நொந்துபோனார். மேலும் ஒருமுறை மனைவி அழைத்து வந்த தெருநாய் அவரையும் கடித்தது. இருவருக்கும் சண்டை அதிகரித்தது. இருப்பினும் மனைவி மாறுவார் என்று நினைத்தார் ஆனால் அவர் தனது செயலை மாற்றவில்லை.
அதேவேளையில் தெருநாய்களுக்கு சமையல் செய்யவும், தெருநாய்கள் கழிவுகளை அகற்றவும், வீட்டைசுத்தம் செய்யும்படியும் மனைவி கூறியுள்ளார். இதையடுத்து கோபமான கணவர் கடந்த 2017 ம் ஆண்டில் விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தெருநாய்களை வீட்டுக்கு அழைத்து வந்து மனைவி பயமுறுத்துகிறார். மனஉளைச்சலை தருகிறார். அதுமட்டுமின்றி திருமணத்தை மீறிய உறவு உள்ளதாக ஆர்ஜே ஒருவரை வைத்து பேசி ‛பிராங்க் கால்' செய்து ஏமாற்றினார். இதனால் கொடுமையை அனுபவித்து வருகிறேன். எனவே விவாகரத்து வழங்க வேண்டும் என்று மனு செய்தார்.
தெருநாய்களுடன் மனைவி சேர்ந்து இருக்கும் போட்டோக்களை ஆதாரங்களாக வழங்கினார். ஆனால் இந்த வழக்கை விசாரித்த குடும்பநல நீதிமன்றம் விவாகரத்து வழங்க மறுத்துவிட்டது. அதேபோல் விவாகரத்துக்கான போதிய காரணமாக இது இல்லை என்று கூறி நீதிமன்றம் கடந்த 2024 பிப்ரவரி மாதம் அவரது வழக்கை தள்ளுபடி செய்தது. இதையடுத்து கணவர் பெங்களூர் சென்றார். அங்கு அவர் பணியாற்றி வருகிறார். இப்படியான சூழலில் தான் மீண்டும் அவர் அகமதாபாத்தில் உள்ள உயர்நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மேல்முறையீடு செய்துள்ளார்.
அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கணவர் தரப்பில், மனைவிக்கு ரூ.15 லட்சம் ஜீவனாம்சம் வழங்க தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டத. அதேபோல் அவரது செயலால் மனஉளைச்சல் மற்றும் கொடுமையை அனுபவித்து வருவதாகவும், விவாகரத்து வழங்க வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால் அவரது மனைவி தரப்பில் தனது கணவர் நல்ல சம்பளம் வாங்குகிறார். அவருக்கு ஏராளமான சொத்துகள் உள்ளன. இதனால் ஜீவனாம்சமாக ரூ.2 கோடியை வழங்க வேண்டும் என்று கூறினார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம் டிசம்பர் 1ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications