Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜகவில் மனைவி! காங்கிரஸில் சகோதரி! குஜராத்தில் ஒரேதொகுதியில் களமிறங்கும் ரவீந்திர ஜடேஜா குடும்பம்

Subscribe to Oneindia Tamil

காந்திநகர்: குஜராத் சட்டசபை தேர்தலில் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி போட்டியிடலாம் என கூறப்படுகிறது. இதனால் அவரை எதிர்த்து அந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ரவீந்திர ஜடேஜாவின் சகோதரியை களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் ரவீந்திர ஜடேஜா யார் பக்கம்? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக எழ உள்ளது.

குஜராத் மாநிலத்துக்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 182 சட்டசபை தொகுதிகள் உள்ள குஜராத் மாநிலத்துக்கு 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கு டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி தேர்தல் நடக்கிறது. 2வது கட்டமாக 93 தொகுதிகளுக்கு டிசம்பர் மாதம் 5ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கை டிசம்பர் 8ம் தேதி நடைபெற உள்ளது.

பாஜக வேட்பாளர் தேர்வு

பாஜக வேட்பாளர் தேர்வு

குஜராத்தில் கடந்த 1998 முதல் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இதனால் 24 ஆண்டுகளாக குஜராத் பாஜக கோட்டையாக உள்ளது. இதனால் குஜராத் தேர்தலின் தொடர் வெற்றியை தக்க வைக்க பாஜக முடிவு செய்துள்ளது. இதனால் வேட்பாளர் தேர்வில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் சொந்த மாநிலம் என்பதால் வேட்பாளர் தேர்வில் இருவரும் அதிக கவனம் செலுத்துகின்றனர்.

 ஜடேஜா மனைவிக்கு வாய்ப்பு

ஜடேஜா மனைவிக்கு வாய்ப்பு

இதனால் தான் காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியல்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில் பாஜகவின் வேட்பாளர் பட்டியல் இன்னும் வெளியாகவில்லை. வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி பாஜகவில் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்நிலையில் தான் இந்திய கிரிக்கெட் வீரரான ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவிக்கு போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எந்த தொகுதியில் போட்டி?

எந்த தொகுதியில் போட்டி?

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா குஜராத்தை சேர்ந்தவர். இவரது மனைவி பெயர் ரிவாபா. இந்நிலையில் ரிவாபா 3 ஆண்டுகளுக்கு முன்பு 2019 நாடாளுமன்ற தேர்தல் வேளையில் பாஜகவில் இணைந்தார். இந்நிலையில் தான் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபாவுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. பாஜகவின் வேட்பாளர்கள் பட்டியல் தயாரிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில் இதுபற்றிய அறிவிப்பு இன்று இரவுக்குள் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

ரிவாபாவின் பாசிட்டிவ் என்ன?

ரிவாபாவின் பாசிட்டிவ் என்ன?

இதற்கிடையே தான் ரிவாபா சட்டசபை தேர்தலில் போட்டியிட ஆர்வமாக இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. கட்சி சார்பில் வாய்ப்பு வழங்கப்பட்டால் அவர் நிச்சயம் களமிறங்க திட்டமிட்டுள்ளார். ரிவாபா ராஜ்கோட்டில் வசித்து வந்தாலும் கூட அவரது தந்தை பெரிய தொழிலதிபராவார். இவர் சமூக சேவையும் செய்து வருகிறார். மேலும் ரவீந்திர ஜடேஜாவின் நாடறிந்த கிரிக்கெட் வீரர். இது அவருக்கு தேர்தலில் பாசிட்டிவாக இருக்கலாம் என பாஜக கருதுகிறது. இதனால் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் பாஜகவும் அவரை களமிறக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

காங்.,கில் ஜடேஜாவின் சகோதரி போட்டி

காங்.,கில் ஜடேஜாவின் சகோதரி போட்டி

ஜாம்நகர் வடக்கு தொகுதியில் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா போட்டியிட்டால் அவரை எதிர்த்து பலம்வாய்ந்த ஒருவரை நிறுத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. அதன்படி ரவீந்திர ஜடேஜாவின் சகோதரி நயினாவை களமிறக்க காங்கிரஸ் பரிசீலனை செய்து வருகிறது. அதாவது நயினா ஜாம்நகர் பகுதி மக்களுக்கு மிகவும் பரீட்சயமானவர். இவர் 2019ல் பாஜகவில் ரிவாபா சேர்ந்த பிறகே காங்கிரஸில் இணைந்தார்.

ஆக்டிவ்வான தலைவராக சகோதரி

ஆக்டிவ்வான தலைவராக சகோதரி

இருப்பினும் மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவராகவும், மிகவும் ஆக்டிவ்வான தலைவராகவும் உள்ளார். இதனால் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா தேர்தலில் களமிறங்கினால் அவரை எதிர்த்து ஜடேஜாவின் சகோதரி நயனா ஜடேஜா போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளது. இவர்கள் இருவரும் எதிரும், புதிருமாக போட்டியிட்டால் குஜராத்தில் உள்ள பிரபல நட்சத்திர தொகுதிகளில் ஒன்றாக ஜாம் நகர் வடக்கு தொகுதியும் மாறலாம் என்பது கவனிக்கத்தக்கதாகும்.

மில்லியன் டாலர் கேள்வி

மில்லியன் டாலர் கேள்வி

ஒருவேளை ஜாம்நகர் வடக்கு தொகுதியில் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா பாஜக சார்பிலும், அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் சகோதரி நயினாவும் களமிறங்கினால் ரவீந்திர ஜடேஜா யாருக்கு ஆதரவாக இருப்பார்? குடும்பத்தினர் யார் பக்கம் இருப்பார்கள்? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக தற்போது எழுந்துள்ளது. ஒருவேளை இதுபோன்ற பிரச்சனை இருந்தால் ரவீந்திர ஜடேஜா அரசியல் குறித்து வெளிப்படையாக பேசாமல் அமைதி காக்கலாம் என சில நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+