குஜராத்: 6 தொகுதிகளில் பாஜக, காங்கிரஸ் சம இடங்களில் முன்னிலை
குஜராத்: ஓபிசி தலைவர் பாஜகவின் அல்பேஷ் தாக்கூர் தோல்வி முகம்- 6 தொகுதிகளில் 3-ல் காங். முன்னிலை
அகமதாபாத்: குஜராத்தில் 6 சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் பாஜக 3 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 3 இடங்களைக் கைப்பற்றும் நிலை உள்ளது.
குஜராத் மாநிலத்தில் ரதன்பூர், பயாட், அம்ராய்வாதி, லுனாவாடா, கேரலூ, தாரட் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் ரன்பூர், பயாட் 2 தொகுதிகளில் காங்கிரஸும் எஞ்சிய தொகுதிகளில் பாஜகவும் முன்னிலையில் உள்ளன.

அல்பேஷ் தாக்கூர்
ரதன்பூர் தொகுதியில் காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு தாவிய ஓபிசி தலைவர் அல்பேஷ் தாக்கூர் போட்டியிட்டார். இத்தொகுதியில் 2017-ம் ஆண்டு காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட அல்பேஷ் தாக்கூர் 85,777 வாக்குகள் பெற்று அமோக வெற்றியைப் பெற்றார். லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்தார்.

மீண்டும் போட்டி
இதனைத் தொடர்ந்து எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் அல்பேஷ். அவருடன் அவரது சகாவும் பயாட் தொகுதி எம்.எல்.ஏ.வுமான தவல்சின் ஜஹாலாவும் பாஜாவுக்கு தாவினர். இந்த இருவருக்கும் அதே தொகுதிகளில் இடைத்தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு கொடுத்தது.

பின்னடைவில் அல்பேஷ் தாக்கூர்
ஆனால் இருவருமே தங்களது தொகுதிகளில் பின்னடைவை சந்தித்து வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி ரதன்பூர் தொகுதியில் அல்பேஷ் தாக்கூர் சுமார் 10,000 வாக்குகள் பின் தங்கி உள்ளார்.

பயாட்டில் பாஜக பின்னடைவு
பயாட் தொகுதியில் தவல்சின் ஜஹாலா சுமார் 3,000 வாக்குகள் பின் தங்கி உள்ளார். இரு தொகுதிகளிலுமே காங்கிரஸ் முன்னணியில் உள்ளது. இந்த இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்கவை என்பதால் பாஜகவின் முகமாக நின்ற இருவராலும் வெல்ல முடியவில்லை.

அம்ராய்வாதியிலும் பாஜக பின்னடைவு
இதேபோல் அம்ராய்வாதி தொகுதியில் பாஜக வேட்பாளரை விட காங்கிரஸ் வேட்பாளர் பட்டேல் தர்மேந்திரா சாந்திலால் சுமார் 2,000க்கும் அதிகமான வாக்குகள் முன்னிலஇயில் உள்ளார். குஜராத்தின் மொத்தம் 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாஜக 3; காங்கிரஸ் 3 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளன.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications