குஜராத்தில் மங்கிப் போச்சா மோடி மேஜிக்.. பிரைட்டாக மாறிய காங்கிரஸ்.. உபயம் ராகுல்!
என்னதான் பாஜக மீண்டும் குஜராத்தில் ஆட்சியைப் பிடித்தாலும் மோடி மேஜிக் மங்கி விட்டதாகவே தெரிகிறது.
Recommended Video

டெல்லி: குஜராத்தில் மோடி மேஜிக் மங்கிப்போய்விட்டதாக கருதப்படுகிறது. எனவேதான் கடும் போராட்டத்திற்கு இடையே பாஜக வெற்றியை தக்கவைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்திக்கு இதுவே மிகப்பெரிய வெற்றி என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
182 தொகுதிகள் கொண்ட குஜராத் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் டிசம்பர் இருகட்டங்களாக நடைப்பெற்றது. இதையடுத்து இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
பிரதமர் மோடியின் சொந்த ஊரான குஜராத்தில் சட்டமன்ற தேர்தலில் மிக சிறப்பாக வெல்லும் என பார்க்கப்பட்ட நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவியது.

முந்திய காங்கிரஸ் கட்சி
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரம் காங்கிரஸ் முன்னிலை வகித்தது. எண்ணப்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை பெற்றிருந்தது. ஆனால் காலை 9 மணியிலிருந்து, நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது.

முதல் தேர்தல் முடிவு
காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல்காந்தி பதவியேற்ற பின்னர் இரு மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகின. இது ராகுல்காந்திக்கு வளர்ச்சி என்றும், மக்களின் அமோக ஆதரவு கிடைத்துள்ளது என்றே கருதினர்.

பின் தங்கிய காங்கிரஸ் கட்சி
மோடி அலையை முடக்கி, காங்கிரஸின் கை ஓங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வாக்குபதிவுக்கு பிந்தைய கருத்துகணிப்பு மெய்யாகும் வகையில் பாஜக மீண்டும் எழுச்சியடைந்தது. காங்கிரஸ் கட்சி மீண்டும் பின் தங்கியது.

விழுந்து எழுந்த பங்குச்சந்தை
மோடி மேஜிக் எல்லாம் அவ்வளவுதானா? தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் பொய்யாகி விடுமோ என்றே பாஜகவினரும், ஆதரவாளர்களும் கருதினர். பங்குசந்தையும் கூட கடுமையாக சரிவை சந்தித்தது.
அடுத்தடுத்து வெளியான முடிவுகளால் பாஜக முன்னேறவே சுதாரித்து பங்குச்சந்தைகள் சரிவில் இருந்து மீண்டன.

மோடி அலை என்னவாச்சு?
மோடி அலை எல்லாம் போச்சு... சொந்த மாநிலத்திலேயே மோடியின் மேஜிக் ஜொலிக்கவில்லை என்றே கருதும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடுமையான போராட்டத்திற்குப் பின்னரே குஜராத்தில் பாஜகவை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர வைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கைப்பற்றிய காங்கிரஸ்
குஜராத்தில் கடந்த சட்டசபை தேர்தல்களை விட காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்கள் கிடைத்துள்ளன. ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற கனவு பலிக்கவில்லை என்றாலும் பாஜகவிற்கு மரணபயத்தை காட்டிய ராகுல்காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்க இது மிகப்பெரிய பெற்றி என்றே கருதப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications