For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குடும்பமே எதிர்த்து நின்றது.. மனைவி ரிவபா வென்றதும்.. பணத்தை வீசி ஏறிந்து.. ஜடேஜா செய்த காரியம்!

Google Oneindia Tamil News

காந்திநகர்: குஜராத் சட்டசபை தேர்தலில் ஜடேஜாவின் மனைவி ரிவபா ஜடேஜா ஜாம்நகர் வடக்கு தொகுதியில் வென்ற நிலையில், அதை ஜடேஜா கொண்டாடிய விதம் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் குஜராத் சட்டசபை தேர்தலில் வென்று 7வது முறையாக பாஜக ஆட்சி அமைத்துள்ளது.

இதுவரை 6 தேர்தல்களில் வென்றதை விட அதிக இடங்களை வென்று இந்த முறை மிகப்பெரிய பெரும்பான்மையோடு பாஜக ஆட்சி அமைத்துள்ளது. பாஜகவில் பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் கடந்த 1 மாதமாக தீவிரமாக பிரச்சாரம் செய்த நிலையில் பாஜக இந்த இமாலய வெற்றியை பதிவு செய்துள்ளது.

மாண்டஸ் புயல் பாதிப்பு எப்படி இருக்கும்? வர்தா, தானே போல புரட்டிபோடுமா? வெதர் எக்ஸ்பர்ட்ஸ் விளக்கம்! மாண்டஸ் புயல் பாதிப்பு எப்படி இருக்கும்? வர்தா, தானே போல புரட்டிபோடுமா? வெதர் எக்ஸ்பர்ட்ஸ் விளக்கம்!

வெற்றி

வெற்றி

குஜராத் சட்டசபை தேர்தலின் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ரிவபா ஜடேஜா பாஜக சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். இந்த தேர்தலில் நேற்று வாக்கெடுப்பின் போது ஜாம்நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிபேந்திரசிங் சதுர்சிங் ஜடேஜாவை பின்னுக்கு தள்ளி பாஜகவின் ரிவபா ஜடேஜா முன்னிலை வகித்து வந்தார். வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில் ரிவபா ஜடேஜா 84336 வாக்குகள் பெற்று வென்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் பிபேந்திரசிங் சதுர்சின் ஜடேஜா 22822 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்துள்ளார். இதன் மூலம் ஜடேஜா மனைவி ரிவபா ஜடேஜா முதல்முறையாக குஜராத் சட்டசபைக்கு செல்கிறார்.

மோதல்

மோதல்

இந்த தேர்தலில் ரிவபா வாய்ப்பு பெற்றதே அதிசயம்தான். சொந்த முயற்சியில் தீவிரமாக உழைத்து இவர் இந்த வாய்ப்பை பெற்றுள்ளார். இங்கு இருக்கும் சிட்டிங் எம்எல்ஏவிற்கே பாஜக வாய்ப்பு கொடுக்காமல் இவருக்கு வாய்ப்பு கொடுக்கும் அளவிற்கு கடினமாக உழைத்தார். ஜாம்நகர் வடக்கு தொகுதியில் கடந்த 2014ல் இருந்தே பாஜகதான் வென்று வருகிறது. அங்கு சிட்டிங் எம்எல்ஏவாக இருந்தவர் பாஜகவின் தர்மேந்திரசிங் எம் ஜடேஜா. இவருக்கு இந்த முறை சீட் கொடுக்காமல் ரிவபா ஜடேஜாவிற்கு பாஜக சீட் கொடுத்தது. ரிவபா ஜடேஜா கடந்த 2019ல் பாஜகவில் இணைந்தார். ஜாம்நகர் - சவுராஷ்டிரா பகுதிகளில் கடந்த 2 வருடமாக இவர் தீவிரமாக தேர்தல் பணிகளை செய்து வந்தார்.

வெற்றி

வெற்றி

அதன் காரணமாக ஜாம்நகர் வடக்கு தொகுதி ரிவபா ஜடேஜாவிற்கு வழங்கப்பட்டது. இங்கு இருக்கும் கிராமங்களுக்கு இவர் நடைபயணம் மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் வேட்பாளர் பிபேந்திரசிங் சதுர்சிங் ஜடேஜாவை எதிர்த்து இவர் இந்த வெற்றியை பதிவு செய்துள்ளார். இரண்டு பேருமே ராஜ்புட் பிரிவான ஜடேஜா வகுப்பை சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் தூரத்து சொந்தம்தான். அதாவது பங்காளிகள் போல. இதில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதராகவே ஜடேஜாவின் குடும்பம் பிரச்சாரம் செய்தது.

மருமகள்

மருமகள்

தங்கள் மருமகளுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கூறி தேர்தலின் போது ரிவபா ஜடேஜாவிற்கு எதிராக அவரின் மாமனார் குடும்பம் பிரச்சாரம் செய்தது. ஆனால் இதனால் குடும்ப அளவில் பிரச்சனை எதுவும் வரவில்லை. இந்த நிலையில்தான் தனது மனைவியின் வெற்றியை தொகுதியில் நேற்று ஜடேஜா கொண்டாடினார். தொகுதியில் இருக்கும் கட்சி அலுவலகத்தில் பிரம்மாண்டமாக ஜடேஜா கொண்டாடினார். கையில் 2000 ரூபாய் நோட்டு கட்டை வைத்து, அதை மேளம் அடித்தவர்கள் மீது கொஞ்சம் கொஞ்சமாக தூக்கி வீசி கொண்டாடினார். பல 2000 கட்டுகளை எடுத்துக்கொண்டு வந்து இவர் அங்கு இருந்த இளம் நிர்வாகிகளுக்கு பிரித்து கொடுத்து கொண்டாடினார். தனது மனைவியின் வெற்றியை ஜடேஜா கொண்டாடிய விதம் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

English summary
Gujarat Election Results: Jadeja celebrates his wife Rivaba Jadeja victory at Jamnagar North in a cheeky way.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X