குஜராத் தேர்தல்.. கறுப்பு ஆடாக பாஜகவுக்கு தாவப் போகிறாரா ஹர்திக் படேல்? குமுறும் காங். தலைவர்கள்
காந்திநகர்: குஜராத் சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு நடைபெறும் நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஹர்திக் படேல் விலகி பாஜகவில் சேரக் கூடும் என கூறப்படுகிறது. பாஜகவை தொடர்ந்து ஹர்திக் படேல் புகழ்ந்து பேசிவரும் நிலையில் அவருடன் சமாதானப் பேச்சுகளை குஜராத் காங்கிரஸ் தலைவர்கள் முன்னெடுத்தும் வருகின்றனர்.
குஜராத் மாநில சட்டசபையின் பதவிக்காலம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவடைகிறது. ஆனால் குஜராத் மாநிலத்துக்கு முன்கூட்டியே சட்டசபை தேர்தல் நடைபெறக் கூடிய சாத்தியங்கள் இருப்பதாகவே தகவல்கள் வெளியாகி வருகின்றன. குஜராத் மாநிலத்தில் மொத்தம் 182 தொகுதிகள் உள்ளன. 2017-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாஜக 99 இடங்களிலும் காங்கிரஸ் 77 இடங்களிலும் வென்றன. காங்கிரஸ் செல்வாக்கு கொண்ட மாநிலங்களில் ஒன்றாக குஜராத்தும் இருந்து வருகிறது.

பாஜக மும்முரம்
குஜராத் மாநிலத்தைப் பொறுத்தவரை ஆளும் பாஜக, ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதில் முனைப்பாக இருக்கிறது. பிரதமர் மோடி முதல் உள்ளூர் பாஜக தலைவர்கள் வரை தேர்தல் நாளையே நடைபெற்றாலும் எதிர்கொள்ள தயார் என்கிற அடிப்படையில் மும்முரமாக களமிறங்கி உள்ளனர். மேலும் குஜராத் சட்டசபை தேர்தல் முன்கூட்டியே நடைபெறலாம் என்கிற கருத்துகளும் வலம் வருகின்றன.

களத்தில் ஆம் ஆத்மி
குஜராத் தேர்தலில் இம்முறை ஆம் ஆத்மி கட்சி களமிறங்குவது பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் பாஜகவுக்கு இடமே இல்லை. காங்கிரஸ் கட்சி செல்வாக்கு மிக்க மாநிலமாக இருந்தது. ஆனால் அண்மையில் நடைபெற்று முடிந்த தேர்தலில் காங்கிரஸிடம் இருந்த ஆட்சியை ஆம் அத்மி பறித்து வெற்றி வாகை சூடியது. குஜராத்தின் சூரத் மாநகராட்சியில் 27 இடங்களை வென்று காட்டி அசத்தியது ஆம் ஆத்மி கட்சி. தற்போதைய நிலையில் 150 தொகுதிகளில் அடிப்படை கட்சி கட்டமைப்பை முடித்துவிட்டோம் என்கிறது அக்கட்சி. இதனால் ஆம் ஆத்மி கட்சி பெரும் நம்பிக்கையுடன் உள்ளது.

ஹர்திக் பட்டேல் தாவல்?
குஜராத்திலும் பாஜக- காங்கிரஸ் எனும் இருதுருவ மோதல்தான் இருந்து வருகிறது. இப்போது ஆம் ஆத்மியும் களமிறங்குவதால் மும்முனைப் போட்டி உருவாகி உள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சிதான் பெரும் போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறது. இந்த நிலையில் காங்கிரஸின் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவரான ஹர்திக் பட்டேல், பாஜகவுக்கு தாவக் கூடிய சாத்தியங்கள் உள்ளதாக சுட்டிக் காட்டி வருகிறார்.

பாஜகவுக்கு போகும் ஹர்திக்?
காங்கிரஸ் கட்சி மீதான அதிருப்தியை தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் ஹர்திக் பட்டேல், பாஜகவை புகழ்ந்து பேசிக் கொண்டும் இருக்கிறார். இது காங்கிரஸ் மேலிடத்தை கடும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. இதனால் ஹர்திக் பட்டேலை சமாதானப்படுத்துவதில் காங்கிரஸ் தலைவர்கள் முனைப்புடன் உள்ளனர். இந்த சமாதானத்தை ஹர்திக் பட்டேல் ஏற்பாரா? அல்லது பாஜகவுக்கு தாவக் கூடிய கறுப்பு ஆடாக இருப்பாரா? என்பது காங்கிரஸ் சீனியர்களின் கலக்கம்.
-
ஹசீனா சையத் கீழ்த்தரமான குணத்தை காட்டிட்டாங்க! காங்கிரஸ் மகளிர் அணி தலைவி அட்டாக்! -
4 மணி நேரம்தான் தூக்கம்.. போனை போட்டு விளாசிய ஸ்டாலின்.. விக்கித்த தலைகள்.. என்ன நடந்தது? -
விஜயால் வந்த ரெட் சிக்னல்.. ஸ்டாலின் மேஜைக்கு போன உளவுத்துறை ரிப்போர்ட்.. உடனே பறந்த மேஜர் உத்தரவு! -
விட்டமின் எம் வரலையே.. பதறும் பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள்.. தமிழக தேர்தலில்.. பெரிய ட்விஸ்ட்! -
4 மணி நேர ‘உறக்கம்’.. பொறுப்பாளர்களை போனில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கும் ஸ்டாலின்! அறிவாலய அலர்ட்! -
காங்கிரஸுக்கு வில்லன் காங்கிரஸ் தான்.. திடீரென டெல்லிக்கு ஓடிய கர்நாடக MLAக்கள்! பதறும் சித்தராமையா -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன்












Click it and Unblock the Notifications