2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக குஜராத் ஹைகோர்ட்டில் ராகுல் அப்பீல்- மே 2-க்கு ஒத்திவைப்பு
அகமதாபாத்: அவதூறு வழக்கில் தமக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிராக குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை மே 2-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது கர்நாடகாவில் ராகுல் காந்தி பிரசாரம் செய்தார். கர்நாடகாவின் கோலாரில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியை விமர்சனம் செய்தார்.

இதனையடுத்து ராகுல் பேச்சை முன்வைத்து அவருக்கு எதிராக குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த அவதூறு வழக்கில் கடந்த மார்ச் 23-ந் தேதி ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனைத் தொடர்ந்து மார்ச் 24-ந் தேதி ராகுல் காந்தியின் லோக்சபா எம்பி பதவி உடனடியாகப் பறிக்கப்பட்டது. அவர் வெற்றி பெற்ற வயநாடு தொகுதி காலியானதாகவும் அறிவிக்கப்பட்டது. ராகுல் காந்திக்கு எதிரான இந்த அடுத்தடுத்த நடவடிக்கைகள் காங்கிரஸ் கட்சியினரை கொந்தளிக்க வைத்தது. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து நாடாளுமன்றத்தை முடக்கிப் போராட்டம் நடத்தினர்.
இதன்பின்னர் கடந்த 3-ந் தேதி குஜராத் மாநிலம் சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் 2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை கோரி ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை ஏப்ரல் 13-ந் தேதி விசாரித்த சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஏப்ரல் 20-ல் தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தது. ஏப்ரல் 20-ந் தேதி 2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை கோரிய ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது.
இதனால் குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நேற்று மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு மீது வரும் இன்று விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் போது, ராகுல் காந்தி மீதான குற்றச்சாட்டுகளுக்கு உரிய ஆதாரங்கள் தரப்ப்டவில்லை என அவரது சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக்சிங்வி வாதிட்டார். இவ்வழக்கின் விசாரணை வரும் மே 2-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications