குஜராத்தில் காங்கிரசுக்கு ஷாக்.. எம்எல்ஏ சிராக் படேல் திடீர் ராஜினாமா.. பின்னணியில் ஷாக் தகவல்
காந்திநகர்: குஜராத் மாநிலம் காம்பாட் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ சிராக் படேல் திடீரென தனது எம்எல்ஏ பதவியை இன்று ராஜினாமா செய்தார். அதோடு அவர் காங்கிரஸ் கட்சியின் மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அதோடு அவரது ராஜினாமாவின் பின்னணி குறித்த விபரம் வெளியாகி உள்ளது.
குஜராத் மாநிலத்துக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தம் 192 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது.

பாஜக 156 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொண்டது. கடந்த 27 ஆண்டுகளாக குஜராத்தில் பாஜக ஆட்சி நடக்கும் நிலையில் அக்கட்சியின் சாதனை பயணம் மேலும் 5 ஆண்டுகளாக தொடர இந்த தேர்தல் வழிவகுத்தது.
மாறாக காங்கிரஸ் கட்சி 17 இடங்களிலும், ஆம்ஆத்மி கட்சி 5 இடங்களிலும், சமாஜ்வாடி கட்சி ஒரு இடத்திலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றனர். இந்நிலையில் தான் காங்கிரஸ் சார்பில் காம்பாட் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சிராக் படேல் இன்று திடீரென்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
குஜராத் சபாநாயகர் சங்கர் சவுத்ரியை இன்று சந்தித்த சிராக் படேல் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை வழங்கினார். அதன்பிறகு சிராக் படேல் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‛‛எனது ராஜினாமாவுக்கு பல காரணங்கள் உள்ளன. காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் நாட்டுக்கு எதிராக உள்ளன. மேலும் காங்கிரஸ் தலைவர்கள் நேர்மறையான எண்ணத்துடன் எதையும் அணுகுவது இல்லை'' என குற்றம்சாட்டினார்.
தற்போது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ள சிராக் படேல் இந்த முறை தான் முதல் முறையாக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு காம்பாட் தொகுதியின் எம்எல்ஏ ஆனார். இத்தகைய சூழலில் அவர் தனது எம்எல்ஏ பதவியை ஓராண்டுக்குள் ராஜினாமா செய்துள்ளார். இதனால் குஜராத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை என்பது 17 ல் இருந்து 16 ஆக சரிந்துள்ளது.
இதற்கிடையே தான் சிராக் படேலின் ராஜினாமாவுக்கு பின்னணியில் உள்ள தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அவருக்கு கட்சியில் உள்ள சில தலைவர்களுக்கும் இடையே மனஸ்தாபம் இருப்பதாகவும், இதனால் அவர் ராஜினாமா செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் விரைவில் பாஜகவில் இணையலாம் எனவும் தகவல்கள் கசிந்து வருகின்றன.
அதோடு குஜராத்தில் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வது தற்போது அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஏனென்றால் கடந்த வாரம் ஆம்ஆத்மி கட்சியின் விசாவதர் தொகுதியின் எம்எல்ஏவான பூபட் பயானி ராஜினாமா செய்தார். அவரை தொடர்ந்து காங்கிரஸின் சிராக் படேல் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications