142 ஆண்டு பழமை..பிரிட்டன் பொருட்களால் உருவாக்கம்.. 91 பேரை காவு வாங்கிய குஜராத் கேபிள் பால வரலாறு
காந்திநகர்: குஜராத் மாநிலம் மோர்பி நகரில் இன்று மாலை கேபிள் பாலம் அறுந்து விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்து நள்ளிரவு 12 மணி நிலவரப்படி 91 பேர் இறந்த நிலையில் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. 142 ஆண்டு பழமையான இந்த பாலம் 1880ல் பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களால் உருவாக்கப்பட்டதும், விபத்துக்கான காரணமும் வெளியாகி உள்ளது.
குஜராத்தில் வரலாற்று சிறப்புமிக்க இடங்களில் ஒன்றாக மோர்பி கேபிள் பாலம் உள்ளது. குஜராத் மோர்பி பகுதியில் உள்ள மச்சு ஆற்றின் குறுக்காக மக்கள் பயன்பாட்டுக்காக இந்த கேபிள் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பாலம் பழுதடைந்து இருந்தது. இதையடுத்து பாலம் புரனமைப்பு பணி துவங்கி நடைபெற்று வந்தது. இந்த புனரமைப்பு பணியை தனியார் நிறுவனம் மேற்கொண்டு வந்தது. இந்த புனரமைப்பு பணி சமீபத்தில் நடந்தது.
இதற்கிடையே தான் குஜராத் புத்தாண்டு கடந்த 26ம் தேதி கொண்டாடப்பட்டது. இந்த புத்தாண்டின்போது மீண்டும் பாலம் திறக்கப்பட்டது. இன்று கேபிள் பாலத்தில் சுமார் 500 பேர் நின்றனர். அப்போது திடீரென்று கேபிள் பாலம் அறுந்து விழுந்தது. இதில் கேபிள் பாலத்தில் இருந்த பொதுமக்கள் அனைவரும் ஆற்றுக்குள் விழுந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உயிருக்கு போராடிய மக்கள்
இதுபற்றி அறிந்தவுடன் அக்கம்பக்கத்து பொதுமக்கள், தீயணைப்பு வீரர்கள், போலீசார் என அனைவரும் திரண்டு வந்து ஆற்றுக்குள் விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் 100க்கும் அதிகமானவர்கள் ஆற்றுக்குள் விழுந்தனர். மேலும் பலர் அறுந்து விழுந்த பாலத்தில் தொங்கியபடி உயிருக்கு போராடினார்கள். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கேபிள் பாலம் அறுந்து விழுந்தது பற்றி அறிந்த அவர் மீட்பு பணியை தீவிரப்படுத்த உத்தரவிட்டார். இதனால் மாநில, தேசிய பேரிடர் மீட்பு படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

91 பேர் பலி
முதலில் 30 பேர் இறந்ததாக தகவல் வெளியானது. அதன்பிறகு மெல்ல மெல்ல இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. நேற்று நள்ளிரவு 12 மணி நிலவரப்படி பலி எண்ணிக்கை 91 ஆக அதிகரித்தது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இன்னும் பலர் ஆற்றுக்குள் சிக்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் நள்ளிரவிலும் மீட்பு பணி நடைபெற்றது. இதனால் உயிர் பலி இன்னும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.

1880ல் பாலம் கட்டி முடிப்பு
இந்நிலையில் தான் பாலம் தொடர்பான அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்த பாலம் முதன்முதலில் 1879ம் ஆண்டு பிப்ரவரி 20 பாலம் கட்ட துவங்கப்பட்டது. பணியை அப்போதைய மும்பை ஆளுநர் ரிச்சர்ட் டெம்பிள் தொடங்கி வைத்தார். 1880ல் சுமார் 3.5 லட்சம் ரூபாய் செலவில் கேபிள் பாலம் கட்டி முடிக்கப்பட்டது. இதற்கு பயன்படுத்தப்பட்ட அனைத்து பொருட்களும் இங்கிலாந்தில் இருந்து கொண்டு வரப்பட்டன.

142 ஆண்டு பழமையானது
142 ஆண்டு பழமையான இந்த கேபிள் பாலம் மொத்தம் சுமார் 765 அடியாகும். இந்த பாலம் பழுதடைந்த நிலையில் சமீபத்தில் புனரமைக்கப்பட்டது. புனரமைப்பு பணிக்காக பாலம் மூடப்பட்டது. குஜராத் புத்தாண்டையொட்டி அக்டோபர் 26 அன்று புதுப்பிக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது. புனரமைப்புக்கு பிறகும் கூட நூற்றாண்டு கண்ட இந்த பாலம் அதிக எடையை சுமக்க திணறியுள்ளதாக கூறப்படுகிறது.

எடையை சுமைக்க திணறல்
நேற்று 100க்கும் அதிகமானவர்கள் பாலத்தில் ஏறி ஓடியும், குதித்தும் விளையாடி உள்ளனர். சிலர் பாலத்தை ஓரத்தில் ஓங்கி மிதித்தும் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் பாலம் அதிகமாக ஆடியுள்ளது. அப்போதே பாலத்தின் நிலைமை மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையில் வழக்கத்தை விட அதிகமான மக்கள் இன்று பாலத்தில் நின்ற நிலையில் சுமை தாங்க முடியாமல் பாலம் அறுந்து விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் உரிய விசாரணைக்கு பிறகே விபத்துக்கான காரணம் பற்றி விபரம் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications