தற்கொலைப்படை தீவிரவாதிகள் ஊடுருவல் எதிரொலி: குஜராத்தில் குவிந்த தேசிய பாதுகாப்பு படை
அகமதாபாத்: சிவராத்திரி அன்று தாக்குதல் நடத்த குஜராத்திற்குள் தற்கொலைப்படை தீவிரவாதிகள் 10 பேர் ஊடுருவியுள்ளனர் என்று பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நசீர் கான் ஜான்ஜுவா தெரிவித்துள்ளதை அடுத்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள் அகமதாபாத் வந்துள்ளனர்.
குஜராத் மாநிலத்திற்குள் தற்கொலைப்படை தீவிரவாதிகள் 10 பேர் ஊடுருவியுள்ளதாக பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நசீர் கான் ஜான்ஜுவா இந்திய பாதுபாப்பு ஆலோசகர் அஜீத் தோவலிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அஜீத் தோவல் குஜராத் மாநில போலீசாருக்கு இது குறித்து தகவல் அளித்தார்.

தீவிரவாதிகள் சிவராத்திரியான நாளை தாக்குதல் நடத்தக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. குஜராத்திற்குள் புகுந்துள்ள தீவிரவாதிகள் லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ் இ முகமது ஆகிய தீவிரவாத அமைப்புகளை சேர்ந்தவர்கள் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இதையடுத்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று போலீசாருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த சூழலில் போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளின் கூட்டம் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதற்கிடையே கட்ச் மாவட்டத்தில் 3 படகுகள் கேட்பார் இன்றி இருந்ததை எல்லை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர். மூன்றாவது படகு கடந்த வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படகில் இருந்தவர்கள் எல்லை பாதுகாப்பு படையினரை கண்டதும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். படகை சோதனை செய்ததில் அதில் சந்தேகத்திற்கு இடமாக எதுவும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஹோட்டல்கள், லாட்ஜுகளில் யாராவது சந்தேகத்திற்கு இடமாக தங்கியுள்ளனரா என்றும் சோதனை நடந்து வருகிறது. இந்த சூழலில் தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள் அகமதாபாத் வந்து குவிந்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications