குஜராத்தில் இளம்பெண்ணை வேவு பார்த்த விவகாரம்- 16–ந்தேதிக்கு முன் நீதிபதி நியமனம்!
டெல்லி: குஜராத்தில் இளம்பெண் ஒருவரை வேவுபார்க்க நரேந்திர மோடி உத்தரவிட்டதாக கூறப்படும் விவகாரத்தை விசாரிப்பதற்காக வரும் 16-ந் தேதிக்கு முன் நீதிபதி நியமிக்கப்படுவார் என மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே கூறியுள்ளார்.

பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி, குஜராத்தில் இளம்பெண் ஒருவரை வேவு பார்க்குமாறு கூறியதன் பேரில், அவரது வலது கரமான அமித் ஷா காவல்துறைக்கு உத்தரவிட்டார் என கடந்த சில மாதங்களுக்கு முன் புகார் எழுந்தது.
இந்த விவகாரத்தில் அமித் ஷா மற்றும் காவல்துறை அதிகாரிகள் இடையே நடைபெற்ற உரையாடல் அடங்கிய டேப் ஆதாரங்களையும் ஊடகங்கள் வெளியிட்டன. மேலும் இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு பெண்கள் அமைப்பினர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தன.
இந்த விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. எனினும் இந்த குழுவுக்கான நீதிபதி இதுவரை நியமிக்கப்படவில்லை.
இந்தநிலையில் இன்று சிம்லாவில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே, குஜராத்தில் இளம்பெண் வேவு பார்க்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரணை நடத்த, குழு ஒன்றை அமைக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்தது. இந்த குழுவுக்கான நீதிபதி 16-ந் தேதிக்கு முன் நியமிக்கப்படுவார் என்றார்.
அருண் ஜேட்லி எதிர்ப்பு
ஆனால் மத்திய அரசின் இந்த முடிவு, அரசியல் உள்நோக்கம் கொண்டது என்கிறது பாரதிய ஜனதா. இது குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அருண் ஜெட்லி, ‘மோடிக்கு எதிராக காங்கிரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி நடவடிக்கை இது' என்றார். மேலும், மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எந்த நீதிபதியும் ஒத்துழைக்கமாட்டார்' என்றும் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications