இளம்பெண் உளவு விவகாரம்: மோடி மீது ஜனாதிபதியிடம் காங். புகார்
டெல்லி: இளம்பெண்ணை வேவு பார்த்த விவகாரம் தொடர்பாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் காங்கிரஸ் கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர்.
2009 ஆண்டு குஜராத்தில் உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷா, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இளம் பெண் ஒருவரை உளவுபார்க்க காவல்துறையினருக்கு உத்தரவிட்டதாகவும், இந்த விவகாரத்தில் மோடிக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இது பற்றி கோப்ரா போஸ்ட் உட்பட சில இணையதளங்களில் ஆடியோ டேப் வெளியானது. இதனையடுத்து இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. ஆனால் மோடி இது பற்றி எந்த ஒரு விளக்கம் இது வரைதெரிவிக்கவில்லை.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜியிடம் புகார் அளித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications