ஞானவாபி மசூதி வழக்கு: யார் மனு மீது முதலில் விசாரணை? வாரணாசி கோர்ட் இன்று முடிவு!
வாரணாசி: ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் எந்த மனுவை முதலில் விசாரிப்பது என்பதை வாரணாசி மாவட்ட நீதிமன்ற நீதிபதி இன்று முடிவு செய்து அறிவிக்க உள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதி வளாக சுவரில் உள்ள இந்து மத கடவுளான சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என 5 பேர் வாரணாசி நீதிமன்றததில் மனு தாக்கல் செய்தனர். அதாவது இந்து கோவிலாக இருந்த இடத்தில்தான் ஞானவாபி மசூதி கட்டப்பட்டுள்ளது என்பது அவர்களது வாதம்.

மேலும் ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால் ஞானவாபி மசூதி அமைந்துள்ள பகுதிக்குள் நுழைவதற்கு வாரணாசி நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால் இத்தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அஞ்சுமன் இன்டெஜாமியா மஸ்ஜித் கமிட்டி வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் ஞானவாபியில் முஸ்லிம்கள் வழிபாடு நடத்த எந்த தடையும் இல்லை என்றும் மசூதிக்குள் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தியும் உத்தரவிட்டது.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது வாரணாசி மாவட்ட நீதிபதி இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதன்படி வாரணாசி மாவட்ட நீதிபதி அஜய்குமார் விஷ்வேஷா இவ்வழக்கை விசாரித்து வருகிறார். இவ்வழக்கில் நேற்று அனைத்து தரப்பு வாதங்களையும் நீதிபதி கேட்டார்.
Recommended Video
பின்னர் தற்போது தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் எந்த மனுவை முதலில் விசாரிப்பது என்பது தொடர்பான உத்தரவு இன்று வழங்கப்படும் என நீதிபதி அஜய்குமார் விஷ்வேஷா கூறினார். இதனையடுத்து இன்று எந்த மனு மீது முதலில் விசாரணை நடைபெறும் என்பது தெரியவரும்.
-
எல்லாம் சரிதான்! SIRல் தவறு எதுவும் இல்லை! எல்லா மனுக்களையும் மொத்தமாக தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் -
விஜய்க்கு முதல் அக்னி பரீட்சை.. காரணம் வேற யாரும் இல்லை காங்கிரஸ் தான்.. அடுத்து என்ன? -
உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் கோவை மூத்த பெண் வழக்கறிஞர் மோகனா! யார் இவர்? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம்












Click it and Unblock the Notifications