குழந்தையுடன் வரும் பிச்சைகாரர்களுக்கு டிஎன்ஏ சோதனை- குழந்தை திருட்டை தடுக்க நடவடிக்கை!
பெங்களூரு: குழந்தைகளை கடத்தி வந்து பிச்சை எடுப்பவர்களை கண்டுபிடிக்க டி.என்.ஏ சோதனைகளை தொடங்கியுள்ளது பெங்களூரு போலீஸ். 'ஆபரேசன் ஸ்மைல்' என்ற பெயரிலான இந்த நடவடிக்கையின்போது குழந்தையை வைத்து பிச்சை எடுக்கும் பெண்ணின் மரபணுவுடன், குழந்தையின் மரபணு ஒத்துப்போகவில்லை என்றால், அந்த பிச்சைக்கார பெண்மணி கம்பி எண்ண வேண்டியது கட்டாயம்.
சிக்னல்களில் குழந்தைகளை காட்டி பிச்சை எடுப்பது நீண்ட காலமாக நடைமுறையில் இருக்கும் 'தொழில் தந்திரம்'. குழந்தைகளை பார்த்து பரிதாபப்பட்டு பிச்சை போடுவார்கள் என்ற எண்ணத்தில் குழந்தைகளை கடத்தி வந்தும் பிச்சையில் ஈடுபடுத்துவோர் உள்ளனர்.

பிச்சைக்கு பின்னணியில் மாஃபியா
பெங்களூரை பொறுத்தளவில், குழந்தைகளை கடத்தி, பிச்சை எடுக்க பயன்படுத்துவதன் பின்னணியில் ஒரு மாஃபியா கும்பல் இருப்பது அம்பலமாகியுள்ளது. காலை முதல் மாலை வரை பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர்களிடமிருந்து அந்த மாஃபியா பணத்தை பறித்துவிட்டு, அவர்களுக்கு குறிப்பிட்ட தொகையை வாடகையாக கொடுத்து வருகிறது.

குழந்தைகள் கடத்தல்
பிச்சை எடுப்பது மட்டுமே பிச்சைக்காரர்கள் வேலை. குழந்தையை ஆஸ்பத்திரிகைகளில் இருந்தோ, வீடுகளில் இருந்தோ கடத்துவது மாஃபியாக்களின் வேலை. இதற்காகவே பிச்சையில் கிடைக்கும் பெரும்பகுதி பணத்தை இந்த மாஃபியாக்கள் எடுத்துக்கொள்கின்றன.

ஆபரேசன் ஸ்மைல்
மற்றொரு பக்கம் பத்துமாதம் சுமந்து, பாடுபட்டு பெற்ற பிள்ளை காணாமல் போய்விட்டதால் பதறி துடிக்கும் பெண்கள் ஏராளம். இந்த மாஃபியா கும்பல் பிற மாநிலங்களில் இருந்தும் குழந்தைகளை கடத்தி வந்து பிச்சை எடுக்கச் செய்கிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வாக பெங்களூரு போலீசார் கையில் எடுத்துள்ள ஆயுதம்தான் ஆபரேசன் ஸ்மைல்.

பல சட்டங்கள் பாயும்
முதல்கட்டமாக 500 பிச்சைக்காரர்களிடமும், அவர்கள் வைத்திருக்கும் குழந்தைகளிடமும் மரபணு சோதனையை நடத்தி முடித்துள்ளனர் போலீசார். குழந்தைக்கும், பிச்சை எடுக்கும் நபருக்கும் மரபணு ஒத்துப்போகவில்லை என்றால், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டம், கடத்தல் தடுப்பு சட்டம், கர்நாடக பிச்சை தடுப்பு சட்டம், குழந்தைகளுக்கான நீதி சட்டம் உள்ளிட்ட பல சட்டங்களின்கீழ் பிச்சை எடுக்கும் நபர் கைது செய்யப்படுவார். பல ஆண்டு சிறை தண்டனை உறுதி.

போலீஸ் வருது, ஓடு.. ஓடு..
போலீசாரின் இந்த நடவடிக்கையால் குழந்தை கடத்தல் சம்பவங்கள் குறையும் என்று நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர் பெங்களூருவாழ் பொதுமக்கள். ஆனால், காக்கி சட்டைகளை பார்த்ததுமே, டிஎன்ஏ எடுக்க வருகிறார்கள் பயத்தில் தெரிந்து ஓடுகின்றனர் குழந்தைகளுடன் சுற்றும் பிச்சைக்காரர்கள்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications