''சியர்ஸ்''.... மும்பையில் புத்தாண்டுக்காக பார்களை காலை 5 மணி வரை திறக்க அனுமதி!

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பையில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தையொட்டி ஜனவரி 1ம் தேதி அதிகாலை 5 மணி வரை மது பார்களைத் திறந்து வைக்க பாம்பே உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

முன்னதாக பார்கள் அனைத்தும் டிசம்பர் 31ம் தேதிஇரவு 1.30 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் என்று மும்பை காவல்துறை அறிவித்திருந்தது. இதற்கு எதிராக ஹோட்டல் உரிமையாளர்கள், பார் உரிமையாளர்கள் உயர்நீதிமன்றத்தை அணுகியிருந்தனர். அதை விசாரித்த பாம்பே உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை ரத்து செய்து ஜனவரி 1ம் தேதி காலை 5 மணி வரை பார்கள் திறந்து வைக்க அனுமதி அளித்தது.

இதில் என்ன காமெடி என்றால் பார்களுக்கு நேரம் குறித்து காவல்துறை பிறப்பித்த உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று மகாராஷ்டிர அரசே வேண்டுகோள் விடுத்திருந்தது என்பதுதான்.

Happy New Year, Mumbai. Court says bars can remain open till 5 am

ஆனால் மும்பை நகர பெண்களின் நலனைக் கருத்தில் கொண்டே இந்த தடை உத்தரவைப் பிறப்பித்ததாக மும்பை போலீஸ் கமிஷனர் சத்யபால் சிங் தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது அவரது உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடை போட்டு விட்டது.

மும்பை பெண்களே, இனி உங்கள் பாதுகாப்பு உங்கள் கையில்.. பார்த்து சூதானமாக போய் வாருங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+