பட்டாசு வெடிங்க.., ஆனா புகை வராம வெடிங்க.. மத்திய அமைச்சர் 'அடடே'
சுற்றுசூழலை மாசுபடுவதை கட்டுப்படுத்துவதற்காக புகையை உருவாக்காத வெடியைக் கண்டுபிடிக்கும் படி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் வித்தியாசமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
டெல்லி: சுற்றுசூழலை மாசுபடுவதை கட்டுப்படுத்துவதற்காக புகையை உருவாக்காத வெடியைக் கண்டுபிடிக்கும் படி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் வித்தியாசமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
டெல்லியில் தூய்மையான காற்றுக்கான பேரணியை தொடங்கி வைத்து பேசிய இவர் அப்போது அந்த வித்தியாசமான கருத்தையும் தெரிவித்தார். இந்தப் பேரணி டெல்லியில் காற்று மாசு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக செய்யப்படுகிறது.
சிலநாட்களுக்கு முன் டெல்லியில் வெடி பயன்படுத்துவதற்கு எதிராக உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பை அடுத்து அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளதாக தெரிகிறது.

மாசுபட்ட நகரம் டெல்லி
இந்தியாவின் மிக முக்கியமான நகரமான டெல்லி உலகின் உள்ள மாசுபட்ட நகரங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகின்றது. மேலும் மிகவும் மோசமாக மாசு அடைந்த நகரங்களின் பட்டியலிலும் டெல்லி தவறாமல் இடம்பெற்றுவிடும். சமயங்களில் டெல்லியில் இருக்கும் மாசுக்கள் அளவு அதிகமாகி கட்டுப்படுத்த முடியாத அளவையும் தாண்டி செல்கிறது. இதையடுத்து டெல்லியில் தீபாவளி கொண்டாட்டங்களின் காரணமாக இன்னும் மாசுபட வாய்ப்பு இருந்தது.

டெல்லியில் வெடிக்க தடை
டெல்லியின் சுற்றுச் சூழல் மிகவும் மோசமடைவதை தடுக்கும் பொருட்டு , சில நாட்களுக்கு முன் உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதன்படி டெல்லியில் இந்த வருடம் தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிக்க கூடாது என கூறியிருந்தது. இந்தத் தீர்ப்பை மிகவும் கண்டிப்புடன் கடைபிடிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டது.

தூய்மையான காற்றுக்கான பேரணி
இந்தத் தீர்ப்பு சமூக வலைத்தளங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டது. பலரும் இந்த தீர்ப்புக்கு ஆதரவாகவும் , எதிராகவும் பேசினார். இந்த நிலையில் மத்திய சுற்றுச்சுழல் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தற்போது பட்டாசு வெடிப்பது குறித்து கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். டெல்லியில் 'ரன் பார் கிளீன் ஏர்" என்ற பெயரில் நடக்கும் தூய்மையான காற்றுக்கான பேரணியை தொடங்கி வைத்து பேசிய இவர் அப்போது வித்தியாசமான கருத்து ஒன்றையும் தெரிவித்தார். இந்தப் பேரணி டெல்லியில் காற்று மாசு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக செய்யப்படுகிறது.

மாசு ஏற்படுத்தாத வெடி
டெல்லியில் ஏற்பட்டுள்ள மாசு குறித்து பேசிய ஹர்ஷ் வர்தன் "டெல்லியில் அதிக அளவில் மாசு ஏற்பட்டுள்ளதால் அங்கு பட்டாசு வெடிக்க தடை உள்ளது. இனி வரும் காலங்களில் இப்படி தடை இல்லாமல் பட்டாசு வெடிக்க வேண்டும் என்றால் மாசு ஏற்படுத்தாத பட்டாசை தான் உருவாக்க வேண்டும். இந்தியாவில் உள்ள ஆராய்ச்சி மாணவர்களும், அறிவியலாளர்களும் மாசு ஏற்படுத்தாத பட்டாசை உருவாக்கும் முயற்சியில் இறங்க வேண்டும்'' என்று குறிப்பிட்டார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications