ஹரியானாவில் தேர்தல் முடிந்த அடுத்த நாளே பாஜக மீண்டும் சம்பவம்.. கட்சி மாறிய 3 பெரிய கைகள்
சண்டிகர்: ஹரியானா சட்டசபை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைத்துள்ளது. தேர்தலுக்கு பிறகும் கூட, ஹரியானா அரசியலில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லை. வாக்கு எண்ணிக்கை முடிந்த அடுத்த நாளே, 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்துள்ளனர்.
ஹரியானா மாநிலத்துக்கான சட்டசபை தேர்தல் பரபரப்புடன் நடந்து முடிந்துள்ளது. மொத்தமுள்ள தொகுதிக்கு கடந்த 5 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தல் பிரசாரம், வாக்கு எண்ணிக்கை என்று எல்லாவற்றிலும் அதிரடி திருப்பங்கள் இருந்தன. கடந்த 10 ஆண்டுகளாக அங்கு பாஜக ஆட்சி இருக்கும் நிலையில், இந்த முறை எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என காங்கிரஸ் திட்டமிட்டது. 10 ஆண்டு கால ஆட்சியால், மக்களிடம் பாஜக மீதிருக்கும் அதிருப்தியை தங்களுக்கு சாதகமாக மாறும் என காங்கிரஸ் நினைத்தது.

எக்சிட் போல் முடிவுகளும் ஹரியானாவில், காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்றே கூறின. நேற்று வாக்குகள் எண்ணப்பட்ட தொடக்கத்தில் பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகித்தது. சிறிது நேரத்திலேயே முடிவுகள் தலைகீழாக மாறின. பல தொகுதிகளில் காங்கிரஸை முந்திக் கொண்டு பாஜக முன்னிலைக்கு வந்தது.
கடைசியில் ஹரியானாவில் ஹாட்ரிக் வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது பாஜக. பாஜக மொத்தம் 48 தொகுதிகளிலும், காங்கிரஸ் 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தனர். இந்த தேர்தல் முடிவுகளால் காங்கிரஸ் அப்செட்டில் உள்ளது.
ஹரியானா அரசியல் தேர்தல் முடிவுக்கு பிறகும் பரபரப்பாகவே உள்ளது. காங்கிரஸ் எங்கே கோட்டை விட்டது, பாஜக எப்படி வெற்றி பெற்றது என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ஹரியானாவில் வெற்றி பெற்ற சுயேச்சை எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்து வருகிறார்கள்.
இந்தியாவின் பணக்கார பெண் என்று அழைக்கப்படுபவர் சாவித்ரி ஜிண்டால். தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர், பிறகு பாஜகவில் இணைந்தார். சாவித்ரி ஹிஸர் தொகுதியில் போட்டியிட தலைமையில் வாய்ப்பு கேட்டார்.
ஆனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அவர் கட்சியில் இருந்து வெளியேறி அதே தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை எதிர்த்து 18,941 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அவர் இன்று மீண்டும் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். சாவித்ரியை போலவே, மேலும் இரண்டு சுயேச்சை எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். பஹதுர்கா தொகுதியில் போட்டியிட்ட ராஜேஷ் ஜோன் என்ற சுயேச்சை பாஜக வேட்பாளரை எதிர்த்து 41,999 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கனூர் தொகுதியில் போட்டியிட்ட தேவேந்தர் கட்யான் என்ற சுயேச்சை காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து 35,209 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சாவித்ரி, ராஜேஷ், தேவேந்தர் ஆகிய மூன்று பேருமே மத்திய அமைச்சரும், ஹரியானா பாஜக மேலிட பொறுப்பாளருமான தர்மேந்திர பிரதான் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.
இதன் மூலம் ஹரியானாவில் பாஜக ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது. மூன்று சுயேச்சை வேட்பாளர்களும் பாஜகவில் இணைந்ததில் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அவர்களுக்கு கட்சியும் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளது என பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications