ஜனவரி 22ஆம் தேதியை தீபாவளியாக கொண்டாடுவோம்.. தயாராகும் பாஜக! மோடி சொல்ல வழிமொழிந்த ஹரியானா முதல்வர்!
அயோத்தி: ஜனவரி 22ஆம் தேதியன்று தீபாவளி கொண்டாடுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டாரும், ஜனவரி 22ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படும் எனக் கூறியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, அயோத்தியில் சர்வதேச விமான நிலையம், ரயில் நிலையம் எனரூ.15,700 கோடி மதிப்பிலான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அயோத்தியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, “ஜனவரி 22 நடைபெறும் ராமர் கோயில் குடமுழுக்கு விழாவுக்காக உலகம்முழுவதும் வாழும் இந்துக்களுடன், நானும் பேராவலோடு காத்திருக்கிறேன். அன்றைய விழாவில் அனைவரும் பங்கேற்பது சாத்தியமில்லை.
எனவே, அன்று அயோத்திக்கு வர முயற்சி செய்வதற்குப் பதிலாக, கும்பாபிஷேகத்தின்போது 140 கோடி இந்தியர்களும் அவரவர் வீட்டில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். அந்த நாளை தீபாவளியைப் போல மிகப்பெரிய பண்டிகையாக கொண்டாட வேண்டும். கும்பாபிஷேகம் முடிந்த பிறகு அயோத்திக்கு வந்து ராமரை கண்குளிர வழிபடலாம்.” என்றார்.
இந்நிலையில், இன்று ஹரியானா மாநிலம் விருந்தாவனத்தில் உள்ள வாத்சல்யா கிராமத்தில் அயோத்தி இயக்கத்தில் சாத்வியின் பங்கு குறித்த புத்தகத்தை ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் வெளியிட்டார். ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், உ.பி.யின் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா மற்றும் மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி உள்ளிட்ட பல விஐபிக்கள் இந்த விழாவில் பங்கேற்றனர்.
அப்போது பேசிய ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், “ஜனவரி 22ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படும். பிரதமர் மோடி முன்னிலையில் ராமர், ஜென்மபூமியில் ராமர் பிரதிஷ்டை செய்யப்படுவார்” எனத் தெரிவித்துள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications