சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் மரண தண்டனை... ஹரியானா அரசு அதிரடி
சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க ஹரியானா அரசு முடிவெடுத்துள்ளது
ஹரியானா: 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்கார குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க ஹரியானா மாநில அரசு முடிவு செய்துள்ளது
இந்தியா முழுவதும் சிறுமிகள் கற்பழிப்பு சம்பவம் அதிகளவில் நடந்து வருகிறது. கடுமையான தண்டனைகள் இயற்றப்படாததே இத்தகைய குற்றங்களுக்கு காரணம் எனவும், பலாத்காரம் போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டுமென பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஹரியானா மாநிலத்திலும் சிறுமிகள் பலாத்கார சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றஞ்சாட்டி வந்தனர்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஹரியான முதல்வர் மனோகர்லால் கட்டா, 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்தை இயற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது என்று கூறினார்.
மேலும் கடந்த ஆண்டு பதிவான பாலியல் புகார் வழக்குகளில் 25 சதவீதம் பொய்யானவை என்றும், 75 சதவீத பலாத்கார சம்பவங்களில் பாதிக்கப்பட்டோரின் உறவினர்கள், பக்கத்து வீட்டினர், ஏற்கனவே பழக்கமானவர்கள் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது என்றும் கூறினார். எனவே இதுதொடர்பான வழக்குகளில் காவல்துறையினரின் நடவடிக்கை மட்டுமின்றி சமூகத்துக்கும் பொறுப்புள்ளது என்று முதல்வர் மனோகர்லால்கட்டா கூறினார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications