ஹரியானாவில் அமைதியை நிலை நாட்ட களத்தில் இறங்கிய விவசாய அமைப்புகள்.. மோனு மனேசரை கைது செய்ய கோரிக்கை
சண்டிகர்: ஹரியானாவில் அமைதியை நிலை நாட்ட மக்களுக்கு விவசாய அமைப்புகள் கோரிக்கை விடுத்து இருக்கின்றன. இதேபோல் வன்முறைக்கு காரணமாக கருதப்படும் மோனு மனேசரை கைது செய்யவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஹரியானா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக மனோகர் லால் கத்தார் உள்ளார். ஹரியானாவில் கடந்த மாதம் 31 ஆம் தேதி விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் பேரணி நடைபெற்றது. முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நூ பகுதிக்குள் இந்த பேரணி வந்தது. இந்த பேரணியில் , பசு பாதுகாவலர் என்று தன்னை சொல்லிக்கொள்பவரும் பஜ்ரங் தள அமைப்பை சேர்ந்தவருமான மோனு மனேசர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது.

இந்த ஆண்டு துவக்கத்தில் இஸ்லாமிய இளைஞர்கள் கொல்லப்பட்டதற்கு மோனு மனேசர்தான் காரணம் என்று குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில், விஷ்வ இந்து பரிஷத் ஊர்வலத்தில் மோனு மனேசர் பங்கேற்க இருப்பதாக வெளியான தகவல் நூ பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், பேரணியை அங்குள்ள ஒரு கும்பல் பேரணியை தடுத்து நிறுத்தியது. இதனால் இரு தரப்பினரும் கடும் மோதல் வெடித்தது.
கற்களையும் கட்டைகளையும் கொண்டு மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் ஊர்காவல் படையை சேர்ந்த 2 பேர் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர். குருகிராம் வரையிலும் இந்த வன்முறை பரவியது. இதனால் ஹரியானாவில் பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 113 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 305 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 106 பேரை காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள்.
இந்த வன்முறைக்கு அண்டை நாடுகளில் இருந்து குடியேறியவர்களே காரணம் என்று அவர்கள் தங்கியிருந்த வீடுகளையும் புல்டோசர்கள் கொண்டு மாநில அரசு இடித்து தள்ளியது. அதபோல், வன்முறையின் போது நூ மாவட்டத்தில் சட்ட விரோத கட்டுமானங்களை இடிக்கும் பணியையும் மாநில அரசு தீவிரப்படுத்தியது. விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் ஊர்வலத்தில் கற்களை வீசி தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் சஹாரா ஹோட்டலை, அம்மாவட்ட நிர்வாகம் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இடித்து தள்ளியது.
ஹரியனாவில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் விவசாய அமைப்புகளும் உள்ளூர் பஞ்சயத்து அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளன. மேலும் மோனு மனேசரை கைது செய்ய வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாரதிய மஸ்தூர் கிஷான் அமைப்பு நடத்திய மகாபஞ்சாயத்தில் இந்துக்கள், முஸ்லீம்கள், மற்றும் சீக்கியர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் அனைத்து மதத்தினரும் அமைதி திரும்ப ஒத்துழைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. நூ வன்முறையை மாநில அரசு கையாண்ட விதத்தை விவசாய சங்கங்கள் கடுமையாக விமர்சித்து இருந்தன.
இந்த நிலையில், தான் தற்போது அமைதியை நிலை நாட்ட மக்களுக்கு விவசாய அமைப்புகள் கோரிக்கை விடுத்து இருக்கின்றன. நூ மாவட்டத்தில் இரண்டு வாரங்களுக்கு பிறகு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அதேபோல், பேருந்து சேவையும் முழுவதுமாக செயல்பட தொடங்கியுள்ளது. இன்று ஊரடங்கு உத்தரவும் தளர்த்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications