கள்ளக்காதல் செய்த யோகா ஆசிரியர்.. வாடகை வீட்டில் கிளம்பிய வினை.. 7 அடி பள்ளத்தில் மூடப்பட்டு? தேவையா
சண்டிகர்: கள்ளக்காதல் விவகாரத்தினால் ஏற்படும் விவாகரத்து வழக்குகளும், வன்முறை சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே வருகிறது.. பச்சிளம் குழந்தைகளையே, பெற்ற தாய்கள் துடிதுடிக்க கொல்கிறார்கள் என்றால், தாலி கட்டிய கணவனையும் சாப்பாட்டில் விஷம் வைத்து சில மனைவிகள் கொன்றுவிடுகிறார்கள். இந்த கள்ளக்காதலுக்கு ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பேதமின்றி உயிர்கள் காவு வாங்கப்படுவது நம்முடைய நாட்டில் பெருகி கொண்டிருக்கிறது. இதோ இன்னொரு கொடுமை:
மீரட் சம்பவத்தை போல் அரியானாவில் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த யோகா ஆசிரியரை 7 அடி ஆழத்தில் குழி தோண்டி உயிருடன் புதைத்த கணவர் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ஹரியானா மாநிலம் ரோஹ்தக் மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது பாபா மஸ்த்நாத் என்ற பல்கலைக்கழகம். இங்கு ஜக்தீப் என்பவர் யோகா ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த டிசம்பர் 24ம் தேதி மாயமானார்.. அவர் கொல்லப்பட்டுவிட்டதாகவும் தகவல்கள் பரவின.. இதையடுத்து, போலீசாரின் தேடும் பணி ஆரம்பமானது. இறுதியில், 3 மாதங்களுக்கு பிறகு, அதாவது நேற்று முன்தினம் ஜகதீப்பின் உடலை போலீசார் கண்டுபிடித்தனர்.
காலேஜ் புரொபஸர்
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் சொல்லும்போது, "ஜஜ்ஜார் மாவட்டம் மண்டோதி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜக்தீப்.. இவர் கடந்த டிசம்பர் 24ம் தேதி வழக்கம்போல் காலேஜூக்கு சென்றிருக்கிறார்.. அன்று மாலை வீட்டுக்கு திரும்பியவர், அதற்கு பிறகு காணவில்லை.
சம்பவம் நடந்து 10 நாட்களுக்கு பிறகு, அதாவது பிப்ரவரி 3ம் தேதி ஜகதீப் , மாயமானதாக சிவாஜி காலனி போலீசில் புகார் தரப்பட்டது.. இந்த புகாரின்பேரில் போலீசாரும் வழக்குபதிவு செய்து, ஜக்தீப்பை கடந்த 3 மாதங்களாகத் தேடி வந்தனர்.
இறுதியாக, ஜகதீப்பின் செல்போன் அழைப்பு விவரங்கள் சேகரிக்கப்பட்டன.. அத்துடன், தனிப்படை போலீசுக்கு கிடைத்த ரகசிய தகவல்களின்படி ஜகதீப்பை கொன்ற ஹர்தீப், தரம்பால் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
வாடகை வீட்டில் பெண்
இவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும்போது பல்வேறு உண்மைகள் வெளியே வந்தன.. அதாவது, ஜக்தீப் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.. அதே வீட்டில் ஒரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு அவருக்கு ஏற்பட்டுள்ளது.. இந்த விஷயம் தெரிந்து, பெண்ணின் கணவர் இருவரையுமே கண்டித்துள்ளார். ஆனால், கள்ளஜோடியின் உறவு தொடர்ந்து வந்துள்ளது.. அதனால்தான், ஜகதீப்பை தீர்த்துக்கட்ட அந்தப் பெண்ணின் கணவர் முடிவு செய்துளளனர்..
இதற்காக, ஜகதீப் வீட்டிற்கு சென்ற ஹர்தீப்பும் அவரது நண்பர் தரம்பாலும், ஜகதீப்பை கடுமையாக தாக்கி அவரது கைகளையும் கால்களையும் கட்டிப் போட்டுள்ளனர்.. சத்தம் போடாமல் இருப்பதற்காக, அவரது வாயில் டேப்பை போட்டு இறுக்கமாக ஒட்டியிருக்கிறார்கள்.. பிறகு, ரோஹ்தக்கிலிருந்து 61 கி.மீ தூரத்திலுள்ள சர்கி தாத்ரியின் பாண்டவாஸ் என்ற கிராமத்திற்கு காரில் கடத்தி சென்றிருக்கிறார்கள்.
உயிருடன் புதைப்பு
காரணம், அந்த இடம்தான் ஆள் அரவமற்ற வெறிச்சோடி காணப்படும் இடமாகும்.. அங்குள்ள வயலில் 7 அடி ஆழத்திற்கு குழி தோண்டி, அதில், ஜகதீப்பை உயிருடன் மண்ணில் புதைத்துவிட்டார்கள்.. கைதானவர்கள் வாக்குமூலத்தை பெற்ற, நாங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, 7 அடி ஆழத்தில் புதைக்கப்பட்டிருந்த ஜகதீப்பின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காகவும், தடவியவில் ஆய்வுக்காகவும் அனுப்பி வைத்துள்ளோம்.
இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.. ஜக்தீப்பை 7 அடிக்கு பள்ளம் தோண்டி புதைத்ததுடன், எரிக்கவும் முயன்றிருக்கிறார்கள்.. எனவே போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தால்தான் முழு விவரம் தெரியவரும்" என்றார்.
மறக்க முடியாத மீரட் சம்பவம்
இப்படித்தான் கடந்த வாரம் உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் ஒரு கொடுமை நடந்தது.. அதாவது, அமெரிக்க கடற்படை நிறுவன அதிகாரி சவுரப் ராஜ்புத் என்பவரை, அவரது மனைவி முஸ்கன் ரஸ்தோகியும், கள்ளக்காதலன் சாஹில் சுக்லாவும் சேர்ந்து கொன்று விட்டார்கள்.. பிறகு கணவனின் சடலத்தை 15 துண்டுகளாக வெட்டியிருக்கிறார் மனைவி..
அந்த உடலை காலி டிரம்மில் போட்டு, டிரம்மின் மீது கான்கீரிட் கலவையால் மூடி சமாதியாக்கிவிட்டார்.. மிகப்பெரிய அதிர்ச்சியை இந்த மீரட் கொலை ஏற்படுத்தியிருந்த நிலையில், யோகா வாத்தியார் உயிருடன் சமாதியாக்கப்பட்டுள்ளார்.. இந்த கள்ளக்காதல் இன்னும் என்னவெல்லாம் செய்ய போகுதோ? எத்தனை குடும்பத்தை அழிக்க போகிறதோ? தெரியவில்லை.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications