Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

5 பலாத்கார வழக்குகள் பெண்டிங்! சுதந்திரமாக நடமாடி 122 பேர் சாவுக்கு காரணமான உ.பி போலோ பாபா சாமியார்!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் 122 பேர் மரணத்துக்கு காரணமாக சாமியார் போலோ பாபா தப்பி ஓடி தலைமறைகிவிட்டார் என்கிறது அம்மாநில போலீசார். அதேநேரத்தில் 122 பேர் மரணம் தொடர்பான வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் போலோ பாபா சாமியார் பெயரே இல்லை என்கின்றன ஊடக தகவல்கள். இந்த நிலையில் 122 பேர் உயிரிழப்பு காரணமான தப்பி ஓடிய போலோ பாபா சாமியார் மீது ஏற்கனவே 5 பலாத்கார வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவையே அதிரச் செய்திருக்கிறது உத்தப்பிரதேச மாநிலத்தின் ஹத்ராஸ் கூட்ட நெரிசல் மரணங்கள். போலோ பாபா என்ற சாமியாரின் பிரசங்கத்தை கேட்க லட்சக்கணக்கானோர் குறுகலான இடத்தில் ஒன்று திரண்டிருந்தனர். சாமியாரின் பிரசங்கம் முடிந்ததும் அவரது காலடி மண்னை, கார் டயர் மண்ணை எடுப்பதற்காக ஒரே நேரத்தில் அத்தனை பேரும் ஓடியதால் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

hathras bhole baba

இந்த பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் மரணம் அடைந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனால் ஒட்டுமொத்த நாடும் பேரதிர்ச்சியில் உறைந்தது. அத்துடன் உத்தரப்பிரதேச மாநிலத்தின் மருத்துவமனைகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் எதுவுமே இல்லை என்கிற பேரவல உண்மைகளும் வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் போலோ பாபா சாமியாரை தீவிரமாக தேடி வருகிறோம்; அவர் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார் என்கிறது உ.பி. போலீஸ். ஆனால் 122 பேர் மரண சம்பவம் தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் போலோ பாபா சாமியார் பெயரே இல்லை எனவும் கூறப்படுகிறது. அப்படியானால் போலோ பாபா சாமியாரைபாதுகாக்கிறதா? உ.பி. அரசு என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அத்துடன் உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல நகரங்களில் போலோ பாபா சாமியார் மீது 5 பலாத்கார வழக்குகள் நிலுவையில் உள்ளன. பலாத்கார வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட போலோ பாபா சாமியார் எப்படி சுதந்திரமாக நடமாடினார்? அப்படி சுதந்திரமாக நடமாட அனுமதித்ததால்தான் 122 பேர் பலியாகினரா? எனவும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+