ஸ்மிருதி இராணி.. ஏல் பல்கலைக்கழகத்தில் 'பட்டம்' பெற்றவராமே... உங்களுக்குத் தெரியுமா?
டெல்லி: மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி படித்த படிப்பு குறித்து ஏற்கனவே பெரும் சர்ச்சை உலா வரும் நிலையில் அவர் அமெரிக்காவின் ஏல் பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்றிருப்பதாக கூறி புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.
டெல்லியில் நடந்த மாநாடு ஒன்றில் பேசிய 38 வயது ஸ்மிருதி இராணி, தான் ஏல் பல்கலைக்கழகத்தின் பட்டத்தை வைத்திருப்பதாக கூறி அனைவரையும் அசரடித்தார்.
லோச்பா தேர்தல் முடிவுக்குப் பின்னர் ஸ்மிருதி இராணியின் படிப்பு குறித்து பெரும் சர்ச்சை வெடித்தது. இது சற்று அடங்கிய நிலையில் தற்போது புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. தான் ஏல் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதாக கூறியுள்ளார் இராணி.

நானா படிக்காதவள்...
டெல்லி மாநாட்டில் இராணி பேசுகையில், என்னைப் பார்த்துப் பலர் நான் படிப்பறிவில்லாதவள் என்று விமர்சிக்கின்றனர். அவர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன். நான் படித்த படிப்புகளில் ஒன்று ஏல் பல்கலைக்கழகத்தின் டிகிரியும் அடக்கமாகும். நான் இதை வெளியில் காட்டவும் தயாராக இருக்கிறேன்.

தேவையில்லாத திசை திருப்பல்கள்
நான் ஏல் பல்கலைக்கழகத்தின் பட்டம் பெற்றவள். என்னைச் சுற்றி தேவையில்லாத திசை திருப்பல்களை ஏற்படுத்தி வருகின்றனர். எனவேதான் அதில் சிக்கி எனது இலக்குகளிலிருந்து விலகிப் போக நான் விரும்பவில்லை என்றார் அவர்.

அது என்ன படிப்போ
ஆனால் தான் ஏல் பல்கலைக்கழகத்தில் படித்த படிப்பு என்ன என்பது குறித்து இராணி தெளிவுபடுத்தவில்லை.

கிராஷ் கோர்ஸ்
அதேசமயம், கடந்த ஆண்டு ஜூன் 19ம் தேதி ஏல் பல்கலைக்கழகத்தில் ஆறு நாள் லீடர்ஷிப் திட்ட கிராஷ் கோர்ஸ் ஒன்று நடத்தப்பட்டது. அதில் 11 இந்திய எம்.பிக்கள் கலந்து கொண்டனர். அதில் இராணியும் இடம் பெற்றிருந்தார். அதைத்தான் தற்போது இராணி சொல்லியுள்ளாரா என்பது தெரியவில்லை.

எது பற்றியது...
அந்த கிராஷ் கோர்ஸின்போது அணு ஆயுத ஒழிப்பு, அரபு நாடுகளில் ஜனநாயக இயக்கம், பெண்களுக்கு சக்தி, தேர்தல் நடைமுறைகள், சீனாவில் அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சி, நிதிச் சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து விவாதம் நடைபெற்றது.

சர்ட்டிபிகேட் கொடுத்தனரோ
அதில் கலந்து கொண்ட எம்.பிக்களுக்கு சான்றிதழ் கொடுத்திருப்பார்கள். அதைத்தான் டிகிரி என்று இராணி கூறுகிறாரா என்று தெரியவில்லை.

கேஸ் போடுங்க
இந்த மாநாட்டின்போது நீங்கள் உண்மையில் என்னதான் படித்துள்ளீர்கள் என்று ஒருவர் கேட்டபோது அதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமானால் கோர்ட்டில் பொது நலன் மனுவைத் தாக்கல் செய்து கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறினார் இராணி.

பி ஏ - பி.காம்
கடந்த 2004 லோக்சபா தேர்தலின்போது டெல்லியில் போட்டியிட்ட இராணி தாக்கல் செய்த வேட்பு மனுவில் தான் பிஏ பபடித்துள்ளதாக கூறியிருந்தார். அதேசமயம், நடந்து முடிந்த லோக்சபா தேர்தலின்போது தான் பி.காம் படித்ததாக கூறியுள்ளார். இதனால்தான் சர்ச்சை வெடித்தது.












Click it and Unblock the Notifications