2 மணி நேரம் லைவில் ஓடிய தற்கொலை.. திகிலடிக்க வைக்கும் குர்கான் இளைஞரின் மரணம்!
தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொள்வதை இளைஞர் லைவ் செய்துள்ளார்.
Recommended Video

குர்கான்: கமல்ஹாசன் சொன்ன மாதிரி பேசாம இந்த நாட்டைவிட்டே ஓடிப்போயிடலாம் போல இருக்கு. தாய்நாடு என்று சொல்லக்கூட வாய் வரவில்லை சிலரின் செய்கைகளை கண்டு. மனிதாபிமானம் என்பது மருந்துக்கூடவா இந்த மனிதர்களுக்கு இல்லாமல் போய்விட்டது? படியுங்கள் வாசகர்களே.
குர்கான் அருகே ஜதோலி பகுதியை சேர்ந்தவர் அமித் சவுஹான். வயது 26. இவருக்கு ப்ரீத்தி என்ற மனைவியும், 3 வயதிலும், 2 வயதிலும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். ஆனாலும் கணவன்-மனைவி இடையே எப்போதுமே சண்டை.. சண்டை.. சண்டை..
2 தினங்களுக்கு முன்பும் இதே சண்டைதான் ஆரம்பமானது. தகராறு முற்றியது. கணவனோ சத்தம் போட்டுக் கொண்டே இருந்தார். தகராறு ஆரம்பித்தால் அது சீக்கிரத்தில் ஓயாது, கணவனும் இப்போதைக்கு நிறுத்தமாட்டார் என நினைத்த மனைவி, பக்கத்து வீட்டுக்கு தன் குழந்தைகளையும் அழைத்து கொண்டு சென்றுவிட்டார்.

தூக்கிட்டு தற்கொலை
கோபம் தணிந்திருக்கும் என்று சிறிது நேரம் கழித்து வீட்டிற்குள் நுழைந்தார் ப்ரீத்தி. திரும்பி வந்து பார்க்கும்போது, கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தற்கொலை செய்து கொண்ட கணவனோ, தன் தற்கொலையை பேஸ்ஃபுக்கில் லைவ்-ஆக போட்டுள்ளார். அதாவது தற்கொலைக்கு முன்பிருந்தே அந்த லைவ் ஆரம்பித்து விடுகிறது.

2 மணி நேர லைவ்
தனது அறைக்கு அமித் சென்று பேனில் துப்பட்டாவை கட்டி தொங்குவதும், அதன் பின் மனைவி வந்து அதிர்ச்சி அடைவது வரை அந்த பேஸ்புக் லைவ்வில்தான் இருந்துள்ளது. கிட்டத்தட்ட 2 மணி நேரம் லைவ் ஓடியபடியே இருந்தது. 2 வீடியோவாக அமித் இதை பதிவிட்டுள்ளார். முதல் வீடியோவில் தற்கொலைக்கான ஏற்பாடுகள் உள்ளன. அதாவது வீட்டின் கீழே இருந்து முதல் மாடி சென்று, தற்கொலைக்கான ஏற்பாட்டை செய்கிறார். மற்றொன்று தற்கொலைக்கான லைவ்.

இரும்பு மனிதர்களா?
இதில் மற்றொரு கொடுமை என்னவென்றால் இந்த லைவ் வீடியோவை 5000 பேர் பார்த்துள்ளனர். 50 முறை ஷேர் வேறு செய்துள்ளனர். இவர்களுக்கு என்ன ஒரு கல் இதயம்? என்ன ஒரு மனிதம் கெட்ட செயல்? வீடியோவை பார்த்த அனைவருமே இரும்பு மனிதர்களா? ஒருவருக்குமா அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்றோ, அல்லது போலீசுக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றோ தோன்றாமல் போய்விட்டது.

ஒருவரும் கைதாகவில்லை
5000 பேர் நேரடியாக பார்த்தும் ஒரு உயிரை காப்பாற்ற முடியாத பாவிகளாகிவிட்டார்களே.. இப்படி ஒரு சம்பவம் நடந்ததையே மறைத்துவிட்டு, அமித் உடலை அடக்கமும் செய்துவிட்டனர் குடும்பத்தினர். கடைசியில் அமித் நண்பர்கள்தான் இந்த வீடியோ வெளியிட்டுள்ளனர். இதுவரை இந்த தற்கொலை தொடர்பாக ஒரு புகாரும கொடுக்கப்படவும் இல்லை, ஒருவரையும் கைது செய்யவும் இல்லை.

மனிதாபிமானம் எங்கே?
இப்படி மனிதர்கள் எல்லாம் இரும்பு போல இறுகி கிடந்தால் கடைசியில் இன்றைய குழந்தைகளின் நிலை நாளை என்னாகுமோ? முதிர்ச்சியும் மனிதாபிமானமும் இல்லாத யுகத்தில் இன்னமும் வாழ்ந்து தொலைத்து கொண்டிருக்கிறோம் என்பதற்கு இந்த சம்பவம் இன்னொரு எடுத்துக்காட்டு.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications