‘சின்ன வயசு தான், சரியாயிடும்’ காரை மோதி விட்டு அலட்சியமாக பேசிய ராஜஸ்தான் எம்.பி
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் தனது கார் மோதி பைக்கில் சென்ற வாலிபர் ஒருவர் காயமடைந்ததைக் கண்ட எம்.பி ஒருவர், அவரை மருத்துவமனையில் சேர்க்காமல் அலட்சியமாக சென்றதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசியல் என்பதே நாட்டு மக்களுக்கு சேவை புரியும் பணிகளில் ஒன்று தான் என்பதை சில அரசியல்வாதிகள் மறந்து விடுகின்றனர். தன்னால் நேரிடையாக பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவருக்கு அரசியல்வாதி ஒருவர் உதவாமல் சென்ற சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது.
ராஜஸ்தானைச் சேர்ந்த பத்ரிராம் ஜாக்ஹாத் என்ற எம்.பி, நேற்று இரவு அவரது காரில் பாஸ்னி பகுதியில் சென்று கொண்இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது கார் எதிரே வந்த பைக் மீது மோதியது.
மோதிய வேகத்தில் பைக்கை ஓட்டி வந்த வாலிபர் கீழே விழுந்து காயமடைந்தார். பதறிப் போய் காரிலிருந்து கீழே இறங்கிய எம்.பி கீழே அடிபட்டுக் கிடந்த வாலிபரைப் பார்த்து, ‘சின்ன வயசுதானே சரியாகிடும்' எனக் கூறி, காயமடைந்தவருக்கு உதவி செய்யாமல் மீண்டும் வண்டியில் ஏறிச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டவரை எம்.டி.எம். எச் மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு, பின்னர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போராட்டம் நடத்தினர். ஆனால், எம்.பி தரப்பில் இருந்து சம்வம் குறித்து மறுப்போ, மன்னிப்போ அல்லது வேறு விதமான பதிலோ வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications