இந்த பேய் தான் என்னை சீரழித்தது: உபேர் டாக்சி டிரைவரை பார்த்து கதறிய இளம்பெண்
டெல்லி: டெல்லி நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்கச் சென்ற இளம்பெண் உபேர் டாக்சி டிரைவர் ஷிவ் குமார் யாதவை பார்த்த உடன் இந்த பேய் தான் என்னை பலாத்காரம் செய்தது என்று அலறியுள்ளார்.
கடந்த மாதம் 5ம் தேதி இரவு டெல்லியில் 25 வயது பெண்ணை உபேர் டாக்சி டிரைவர் ஷிவ் குமார் யாதவ் தாக்கி, பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஷிவ் குமாரை டிசம்பர் 7ம் தேதி கைது செய்து 8ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு டெல்லியில் உள்ள திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

கடந்த மாதம் 8ம் தேதி பாதிக்கப்பட்ட பெண் வாக்குமூலம் அளிக்க திஸ் ஹசாரி நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார். அவர் அறை எண் 247ல் மாஜிஸ்திரேட் ரியா குஹா முன்பு வாக்குமூலம் அளித்துவிட்டு வெளியே வந்துள்ளார். அப்போது அறை எண் 264ல் இருந்து வெளியே வந்த ஷிவ் குமாரை பார்த்த அந்த பெண் இந்த பேய் தான் என்னை பாலியல் பலாத்காரம் செய்தது என்று அலறியுள்ளார்.
சம்பவம் நடந்து 19 நாட்கள் கழித்து டிசம்பர் 24ம் தேதி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 100 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையில் போலீசார் 44 சாட்சியங்களை குறிப்பிட்டுள்ளனர். குற்றப்பத்திரிக்கையில் அந்த பெண் ஷிவ் குமாரை பார்த்து அலறிய சம்பவம் பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷிவ் குமார் யாதவின் செயலை அடுத்து டெல்லியில் உபேர் டாக்சிக்கு தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications