அமித் ஷா சொல்லியும் கேக்கல.. ராஜஸ்தானில் பெரும் சிக்கல்! அதிருப்தி வேட்பாளர்களால் கையை பிசையும் பாஜக
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில் சீட் கிடைக்காத அதிருப்தியில் பாஜக நிறுத்திய வேட்பாளர்களுக்கு எதிராக 25-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அக்கட்சியினர் சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்து இருப்பது பாஜகவுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது
ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக அசோக் கெலாட் பதவி வகித்து வருகிறார். ராஜஸ்தானில் கடந்த 1993 ஆண்டுக்கு பிறகு இதுவரை ஆளும் கட்சியே மீண்டும் ஆட்சி அமைத்ததாக வரலாறு இல்லை. எனவே வரும் நவம்பர் 25 ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் ஆளும் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்பதில் பாஜக வியூகம் வகுத்து வருகிறது.

கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 100 தொகுதிகளுக்கும் மேல் வென்ற காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடித்தது. ஆனால், இந்த முறை ஆளும் கட்சி மீதான அதிருப்தி அலையை பயன்படுத்தி காங்கிரசை வீழ்த்த பாஜக வியூகம் வகுத்து வருகிறது. அதேவேளையில், கடந்த கால வரலாறுகளை மாற்றி ஆட்சியை தக்க வைப்பதில் காங்கிரசும் பல்வேறு வியூகம் வகுத்து வருகிறது.
ராஜஸ்தானில் உள்ள 200 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 25 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. இதனால் இறுதி கட்ட அனல் பறக்கும் பிரசாரத்தில் காங்கிரஸ் - பாஜக ஆகிய கட்சிகள் ஈடுபட்டுள்ளன. மீண்டும் ஆட்சியை பிடிக்க வியூகம் வகுத்து வரும் பாஜகவுக்கு அதிருப்தியாளர்களால் கடும் தலைவலி ஏற்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாததால் பாஜகவை சேர்ந்த 25 க்கும் மேற்பட்டவர்கள் அக்கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளனர். முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேவின் தீவிர ஆதரவாளராக கருதப்படும் ராஜ்பால் சிங் ஷெகாவத் இந்த அதிருப்தியாளர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். அதிருப்தியாளர்களில் ஒரு சிலரை பாஜக மேலிடம் சமாதானப்படுத்தி வாபஸ் பெற வைத்தது.
இருந்தாலும் 25 க்கும் மேற்பட்டவர்கள் வேட்பு மனுவை வாபஸ் பெறாமல் களத்தில் உள்ளனர். உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர் கஜேந்திர ஷெகாவத் போனில் பேசி சமாதானப்படுத்த முயன்றனர். ஆனாலும் இதிலும் பலன் கிடைக்கவில்லை. அஷு சிங்சுருபுரா, யூனுஷ் கான், ஆகியோரிடம் கட்சி மேலிடம் சமாதன முயற்சியை மேற்கொண்ட போதும் அதை ஏற்காமல் சுயேட்சையாக போட்டியிட திட்டமிட்டுள்ளனர். ராஜஸ்தானில் இந்த முறை மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் ஒரு முஸ்லீம் வேட்பாளரைக் கூட அக்கட்சி நிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications