"நெஞ்சு நடுங்குதே".. தோட்டத்தில் சிறுமியின் கை, கால்களை கட்டிப்போட்டு.. 2 நாளாக பலாத்காரம்.. அய்யோ
14 வயது சிறுமியின் கை, கால்களை கட்டிப்போட்டு 2 நாட்களாக பலாத்காரம் செய்துள்ளான் ஒரு கொடியவன்
புவனேஸ்வர்: கொஞ்சம்கூட மனசாட்சியே இல்லாமல், 14 வயது சிறுமியின் கை, கால்களை கட்டிப்போட்டு, 2 நாட்களாக பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறான் ஒரு கொடூரன்.. "கும்பல் பலாத்காரம்" என்று போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர். அசாம் மாநிலத்தில் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்து, நெஞ்சை பதற வைத்து வருகிறது.
பாஜக ஆட்சி செய்துவரும் அசாம் மாநிலத்தில் அதிகளவில் குழந்தை திருமணம் நடப்பதாக குற்றச்சாட்டுகள் ஒருபக்கம் எழுந்து வந்தாலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்தபடியே உள்ளன. பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பும் கேள்விக்குறியாகி வருகிறது.
அஸ்ஸாமில் நிகழும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், கடந்த 2019-ம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி இந்தியாவில் நடக்கும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளின் சராசரி அளவைவிட 3 மடங்கு அதிகம் என்றார்கள்..

வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்வது மற்றும் கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் அஸ்ஸாம் மற்ற பெரிய மாநிலங்களைவிட முன்னிலையில் உள்ளது. கடந்தவாரம்கூட ஒரு பயங்கர சம்பவம் அங்கு நடந்தது.. 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, பலாத்கார சம்பவத்தை வீடியோ எடுத்து பணம் கேட்டும் மிரட்டியிருக்கிறது ஒரு கும்பல்... பெண்களுக்கு எதிரான குற்றம் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், அதனால், இதனை தடுக்க போலீசும், அரசாங்கமும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் மகளிர் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளன.

தோட்டத்தில்
பெண்கள் குறித்த புரிதல் சமூகத்தில் மாற்றம் பெறாத வரை, இப்படிப்பட்ட குற்றங்கள் குறைய வாய்ப்பே இல்லை என்றும் அவர்கள் அழுத்தமாகவும், ஆவேசமாகவும் கூறி வருகிறார்கள். இதோ, மற்றொரு பயங்கரம் நடந்துள்ளது.. அங்குள்ள திப்ரூகார் மாவட்டத்தில் பெபேஜியா என்ற கிராமம் உள்ளது.. இந்த கிராமத்தை சேர்ந்தவள் அந்த 14 வயது சிறுமி.. கடந்த 3ம் தேதி இந்த சிறுமி திடீரென்று காணாமல் போய்விட்டாள்.. இதனால் பதறிப்போன குடும்பத்தினர் மகளை காணாமல் பல இடங்களில் தேடினர்.. எங்கேயும் கிடைக்காததால், அந்த சிறுமியின் அம்மா போலீசில் புகார் தந்தார்..

தேயிலை தோட்டத்தில்
இந்த புகாரின் பேரில் போலீசாரும் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில் அத்தபாரி தேயிலை தோட்டத்திற்குள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறுமி ஒருவர் சுயநினைவின்றி கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்திருக்கிறது. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், உடனடியாக தேயிலை தோட்டத்திற்குள் நுழைந்து, சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்... பிறகு, சிறுமியிடம் நடத்திய விசாரணையையடுத்து, அவரது அம்மாவுக்கும் தகவல் தந்தனர்.. வந்து மகளை பார்த்து அந்த பெண் கதறி கதறி அழுதது காண்போரை நிலைகுலைய வைத்துவிட்டது..

கதிகலங்கிடுச்சு
மகளிடம் என்ன நடந்தது என்று விசாரித்ததையடுத்து, பைஜான் அலி என்பவர் மீது சந்தேகத்தின் பேரில் கடத்தல் புகார் அளித்திருக்கிறார் சிறுமியின் அம்மா.. எனவே, பைஜான் அலியை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையை மேற்கொண்டனர். அப்போதுதான், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. பைஜான் அலி, தன்னுடைய கூட்டாளிகளுடன் சேர்ந்த இந்த கொடூர செயலில் ஈடுபட்டிருக்கிறார்.. கூட்டாளிகள் 2 பேர் பைஜானுக்கு மதுபானம் வாங்கி கொடுத்துள்ளனர்.

கயிறால் கட்டினர்
பைஜான் அலி, சிறுமியை கடத்தி சென்று, தேயிலை தோட்டத்தில் வைத்து, கை, கால்களை கட்டி போட்டு 2 நாட்களாக பலாத்காரத்தில் ஈடுபட்டு உள்ளார்... பைஜான் கைது செய்யப்பட்டதுடன், கூட்டாளிகள் 4 பேரை தற்போது விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்... சிறுமியை கயிற்றால் கட்டிப்போட்டு கூட்டு பாலியல் பலாத்காரம் என்று போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர். 376-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவாகி உள்ளது என்றும், தீவிரமான விசாரணை நடந்து வருவதாகவும் திப்ரூகார் எஸ்பி ஸ்வேதங் மிஷ்ரா தெரிவித்துள்ளார்..












Click it and Unblock the Notifications