For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஈரக்குலையே நடுங்கிடுச்சே.. அதை போய் வாயில கடித்து துப்பி.. இப்படி நடக்குமா.. டாக்டரே ஆடிப்போயிட்டார்

8 வயது சிறுவன் தன்னை கடித்த மலைப்பாம்பை கடித்து துப்பிய சம்பவம் அதிர்ச்சியை தந்துவருகிறது

Google Oneindia Tamil News

ராய்ப்பூர்: பாம்பு பழி வாங்கும் என்பார்களே.. இங்கே பாம்பையே ஒரு சிறுவன் பழிவாங்கி உள்ளான் என்றால் நம்ப முடிகிறதா.. நம்ம நாட்டில்தான்..!!
பாம்பு என்ற பொதுவான பெயரை கேட்டதுமே மக்கள் அஞ்சி நடுங்குகின்றனர்.. இதற்கு காரணம், பாம்புகளை பற்றி சரியான முறையில் தெரிந்து கொள்ளாததுதான்.

அத்துடன், பாம்புகள் குறித்த தவறான தகவல்களும், காலம் காலமாகவே உலா வந்து கொண்டிருப்பதும், இதுபோன்ற வதந்திகளுக்கு அடிப்படை காரணமாகும்..

அசையாமல் கிடந்த 22 அடி பைத்தான் மலை பாம்பு.. வயிற்றுக்குள் பெண் உடல்! அதிர்ந்த கிராமம்! நடந்தது என்னஅசையாமல் கிடந்த 22 அடி பைத்தான் மலை பாம்பு.. வயிற்றுக்குள் பெண் உடல்! அதிர்ந்த கிராமம்! நடந்தது என்ன

புரளிகள்

புரளிகள்

உலகளவில் நிறைய வதந்திகள் இருந்தபோதிலும், இந்தியாவில், பாம்பு தொடர்பான வதந்திகளும், கட்டுக்கதைகளும் அதிகம் உண்டு.. உதாரணமாக, மகுடி வாசித்தால் மயங்கும் என்பார்கள்.. பாம்புகள் பழி வாங்கும் என்று ஆதிகாலம் முதலே சொல்லப்பட்டு வருகிறது.. அதிலும் மறுஜென்மம் எடுத்து வந்து பழிக்குப் பழிவாங்கும் என்று நடுநடுங்க வைத்துள்ளார்கள்.. உண்மையை சொல்லப்போனால், அவற்றை துன்புறுத்தும் நபர்களை துரத்துவதிலோ அல்லது அவர்களை தேடிக்கண்டுபிடித்து பழிவாங்க முயற்சிப்பதோ கிடையாது. காரணம், தன்னைத் தாக்கியவர்களை நினைவுகூற போதுமான நினைவாற்றலும் பாம்புகளிடம் இல்லை.

 பழிக்குப்பழி

பழிக்குப்பழி

நிறைய மூடநம்பிக்கைகளுடன், இந்த பாம்பு பழிவாங்கும் என்ற தகவலும் இணைந்துவிட்டதால், பாம்பின் மீதான அச்சம் நம் மக்களுக்கு நீடித்தே வருகிறது.. ஆனால், அப்படிப்பட்ட பாம்பை ஒருசிறுவன் பழிவாங்கி உள்ளான்.. பொதுவாக, சத்தீஸ்கர் மாவட்டத்தில் பாம்பு கடித்தால் ஒன்றும் ஆகாது என்ற நம்பிக்கையும் அதிகமாக இருக்கிறது.. அந்தவகையில், ராய்ப்பூருக்கு வடகிழக்கே 350 கிமீ தொலைவில் ஜாஷ்பூர் என்ற பகுதி உள்ளது.. இது மலைவாழ் பகுதியாகும்.. இங்கு வசித்து வரும் பழங்குடி மக்களுக்கு பாஹடி கோர்வா என்று பெயர்.. இந்த பகுதியில் 70 வகையான பாம்புகள் காணப்படுகிறதாம்.

நாகலோகம்

நாகலோகம்

பாம்புகள் நிறைந்திருக்கும் இந்த பகுதியை உள்ளூர் மக்கள் நாகலோகம் என்று பெயரிட்டுள்ளார்கள்.. இந்த 70 பாம்புகளில் 4 வகையான நாகப்பாம்புகள், 3 அதிக விஷமுள்ள பாம்புகள் இருக்கின்றனவாம்.. இங்குள்ள பந்தர்பாத் கிராமத்தில் தீபக் என்ற 12 வயது சிறுவன், கடந்த திங்கள்கிழமை தன்னுடைய வீட்டின் பின்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்தான்... அப்போது நாகப்பாம்பு ஒன்று சிறுவனை கடித்துள்ளது... இதையடுத்து வலியையும் பொருட்படுத்தாமல், தன்னை கடித்த அந்த நாகப்பாம்பை சிறுவன் கெட்டியாக வளைத்து பிடித்து, தன்னுடைய கையில் சுற்றிக் கொண்டு, அந்த பாம்பை மறுபடியும் கடித்துவிட்டான்..

 முறிந்த விஷம்

முறிந்த விஷம்

சிறுவன் கடித்ததில் அந்த நாகப்பாம்பு அங்கேயே இறந்துவிட்டது.. இதையடுத்து பயந்து போன அவரது குடும்பத்தினர், அந்த சிறுவனை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று அனுமதித்தனர்.. தன்னை கடித்த பாம்பை, அப்படியே வளைத்து பிடித்து கடித்து துப்பிவிட்டேன் என்று சொன்னதுமே, டாக்டர்கள் மிரண்டுவிட்டனர். உடனடியாக சிறுவனுக்கு பாம்பு விஷம் முறிவு ஊசியை செலுத்தினர்.. ஒருநாள் முழுக்க கண்காணிப்பிலேயே வைத்திருந்தனர்.. பிறகு சிறுவன் பூரண குணம் என்பதை அறிந்து வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்..

 ஷாக்கிங்

ஷாக்கிங்

இதுகுறித்து அந்த சிறுவன் சொல்லும்போது, "பாம்பு என் கையை கடித்தது.. நான் மிகுந்த வலி வேதனையில் இருந்தேன்... பிறகு, என்னை கடித்த அந்த பாம்பை வளைத்து பிடித்து கையில் சுற்றிக்கொண்டு 2 முறை கடித்து துப்பினேன்.. ஒரே செகண்டில் இவை எல்லாம் நடந்தது" என்றான்.. பாம்பு கடித்ததுமே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதால், சிறுவனின் உடலில் விஷம் பரவாமல் தடுக்கப்பட்டது.. ஆனால், விஷம் வெளியேறவில்லை. இதுபோன்ற பாம்புக்கடிகள் வலிமிகுந்தவையாக இருக்குமாம்.. அதேபோல பாம்பு கடித்த இடத்தை சுற்றி சில அறிகுறிகளை மட்டுமே காட்டக்கூடும்" என்கிறார் பாம்பு நிபுணர் கைசர் ஹுசைன்.. சிறுவனை பாம்பு கடித்ததைவிட, பாம்பை சிறுவன் கடித்ததைவிட, ட்ரீட்மென்ட் தந்த டாக்டர்தான் ஷாக்கில் இருக்கிறாராம்..!!!

English summary
Heartbreaking news: 8 year old bites cobra snake to death in chhattisgarh Village
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X