ஒடிசாவில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதுவரை 72 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

பூரி: நாடு முழுவதும் கோடை காலம் துவங்குவதற்கு முன்பாக வெயிலின் தாக்கம் மிக அதிகமாக காணப்படுகிறது. சுட்டெரிக்கும் வெயிலின் காரணமாக ஒடிசா மாநிலத்தில் இதுவரை 72 பேர் பலியாகியுள்ளனர்.

வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளிலும், தென் இந்தியாவின் சில பகுதிகளிலும் வெப்பம் வாட்டி வதைக்க ஆரம்பித்துவிட்டது. இந்த அதிகபட்ச வெயிலுக்கு ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலத்தில் 100க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

Heat wave continues to wreak havoc in Odisha, 72 dead

இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் கடுமையான வெயிலின் காரணமாக இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒடிசா மாநிலம் முழுவதும் மே 26-தேதி வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மதிய உணவு மட்டும் வழங்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் கோடை வெயிலின் தாக்கம் மே மாதங்களில் மிக அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 2015ல் எல்-நினோ உருவானதால் இந்த ஆண்டு கோடை வெப்பம் கடுமையாக இருக்கும் எனவும் விளக்கம் அளித்துள்ளது. பொதுவாக எல்-நினோவுக்கு அடுத்து வரும் ஆண்டுகளில் கோடை வெப்பம் அதிக அளவில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+