கேரளா, கர்நாடகாவை தொடர்ந்து ஆந்திராவிலும் கனமழை.. 2 மாவட்டங்களில் வெள்ளம்.. பீதியில் மக்கள்!
கேரளா, கர்நாடக மாநிலங்களை தொடர்ந்து ஆந்திராவிலும் கனமழை பெய்து வருகிறது.
கிருஷ்ணா: கேரளா, கர்நாடக மாநிலங்களை தொடர்ந்து ஆந்திராவிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணா, கோதாவரி மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தென் மேற்கு பருவமழையின் தீவிரத்தால் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாவட்டங்களில் வெளுத்து வாங்கியது. இதனால் கேரள மாநிலம் வரலாறு காணாத சேதத்தை சந்தித்தது. .
வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு நாடு முழுவதிலும் இருந்து உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தமிழகத்திலும் உள்ளது.

கேரளாவில் ஓய்ந்தது
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய தமிழக பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக கேரளாவில் மழை ஓய்ந்துள்ளது. அங்கு வெள்ள நீர் வடியத் தொடங்கியுள்ளது.

ஆந்திராவில் கனமழை
இந்நிலையில் ஆந்திராவில் மழை வெளுத்து வாங்க தொடங்கியுள்ளது. ஆந்திராவின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

கிருஷ்ணாவில் வெள்ளப்பெருக்கு
இதனால் கிருஷ்ணா, கோதாவரி உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழையால் கிருஷ்ணா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பாலாற்றில் வெள்ளம்
இதேபோல் கோதாவரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கால் 60 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாலாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கிராமங்கள் துண்டிப்பு
வெள்ளத்தால் தரைப்பாலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் ஏராளமான கிராமங்கள் சாலை போக்குவரத்து இன்றி துண்டிக்கப்பட்டுள்ளன.

மக்கள் அச்சம்
பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவுள்ள விளை நிலங்கள் நீரில் முழ்கியுள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். கேரளாவைப் போல் ஆந்திராவையும் இந்த மழை புரட்டி போட்டுவிடுமோ என மக்கள் அஞ்சுகின்றனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications