வானத்தை பொத்துக்கிட்டு ஊற்றும் மழை.. மூணாறு கடும் வெள்ளப்பெருக்கு.. நீரோடு போன பெரியவாரை தரைப்பாலம்
Recommended Video
மூணாறு: கேரள மாநிலத்தில் உள்ள மூணாறில் கனமழை பெய்து வருகிறது. இதனால் உடுமலைப்பேட்டை- மூணாறு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கேரளத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இடுக்கி, வயநாடு, கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
ஓயாமல் மழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு அதீத மழை கொட்டும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மூணாறு
இந்த நிலையில் இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மூணாறு பகுதியில் நேற்று இரவு முதல் மழை கொட்டித் தீர்த்து வருகிறது.

போக்குவரத்து துண்டிப்பு
இதனால் மூணாறை சுற்றி நீர் சூழ்ந்துள்ளது. கனமழை காரணமாக பெரியவாரை தரைப்பாலம் நீரில் அடித்து செல்லப்பட்டது. இதனால் உடுமலைப்பேட்டை- மூணாறு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மறையூரிலிருந்து மூணாறுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

நிர்வாகம்
முத்திரைப்புழா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் யாரும் மூணாறுக்கு வரவேண்டாம் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

2 நாட்களுக்கு மழை
பாலங்களில் கைவிட்டு துழாவும் அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 நாட்களுக்கு இதே நிலை என்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications