கர்நாடகாவில் வெளுத்து வாங்கும் மழை : காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரிப்பு
கர்நாடகாவில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பெங்களூரு : கர்நாடகாவின் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமான பெய்து வருவதால், கர்நாடக அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.
கர்நாடகாவின் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் பெங்களூரு, குடகு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

குடகு மாவட்டத்தில் இரண்டு நாட்களாக மழை தொடர்ந்து வருவதால், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தலைக்காவிரி பகுதியில் பெய்த மழையால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் காவிரி கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கின் காரணமாக கே.ஆர்.எஸ் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அதே போல், ஹாரங்கி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 295 கன அடி வீதம் நீர் வந்து கொண்டுள்ளது.
கர்நாடக கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகண்டா பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குமாரதாரா, நேத்ராவதி அணைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக கடலோர மாவட்டங்களில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்றும், மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications