இளைஞரை அடித்து சென்ற வெள்ளம்.. டூவீலர் நிலையை பாருங்க.. திடீரென புரட்டிப்போட்ட கனமழை - வீடியோ
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் திடீரென்று கனமழை பெய்தது. இதனால் அஜ்மீர் நல்லா பஜாரில் ஏற்பட்ட வெள்ளம் இளைஞர் மற்றும் டூவீலர்களை அடித்து சென்ற வீடியோ இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.
வடமாநிலங்களில் தற்போது சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் ராஜஸ்தானின் அஜ்மீர் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் நேற்று திடீரென்று கனமழை பெய்தது.

இதனால் அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ராஜஸ்தானின் ராஜ்சமாண்டி பகுதியில் பள்ளி மாணவ-மாணவிகளை ஏற்றி சென்ற வேன் வெள்ளத்தில் சிக்கியது. அந்த பகுதி மக்கள் அனைவரும் சேர்ந்து வேனில் இருந்து பள்ளி மாணவ-மாணவிகளை பத்திரமாக காப்பாற்றினர்.
மேலும் நேற்று காலையில் அஜ்மீரில் உள்ள நல்லா பஜாரில் மக்கள் அதிகம் கூடினர். அங்குள்ள தர்காவிற்கும் இஸ்லாமியர்கள் சென்றனர். இந்த வேளையில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் நல்ல பஜாரில் மக்கள் நடந்து செல்லும் பாதையில் வெள்ளம் ஏற்பட்டது. ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவது போல் மழைநீர் பாய்ந்தது.
இந்த வெள்ளத்தை கடந்து வீட்டுக்கு செல்ல முயன்றபோது ஒருவர் அடித்து செல்லப்பட்டார். அவரை அந்த பகுதியில் உள்ள கடைக்காரர்கள் கடையில் இருந்தபடியே துணி, கயிறை வீசி மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இறுதியாக ஹோட்டலில் இருந்தவர் தனது கையை கொடுத்து அந்த நபரை மீட்டார்.
அதேபோல் வெள்ளத்தால் பலரும் தங்களின் வீடுகளுக்கு செல்ல முடியாத நிலை உருவானது. அதுமட்டுமின்றி பஜார் பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த டூவீலர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். இதுதொடர்பான வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications