பத்ரிநாத்தில் பக்தர்கள் பயணித்த ஹெலிகாப்டர் விழுந்து விபத்து.. இன்ஜினியர் பலி
டேராடூன்: பத்ரிநாத்தில் பக்தர்கள் சென்ற ஹெலிகாப்டர் விழுந்து ஏற்பட்ட விபத்தில் ஒரு இன்ஜினியர் பலியான நிலையில், 2 பைலட்டுகள் காயமடைந்தனர்.
உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத் கோவிலுக்கு புனித யாத்திரை மேற்கொண்டவர்களை சுமந்து சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஹெலிகாப்டர் இன்ஜினியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இரு பைலட்டுகள் படுகாயமடைந்தனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத், ஹரித்துவார், கேதர்நாத் போன்ற புனித ஸ்தலங்களுக்கு பக்தர்கள் செல்வதற்கு சுற்றுலா துறை மூலமாக ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த நிலையில், இன்று காலை, 5 பக்தர்கள் மற்றும் இரு பைலட்டுகள், ஒரு இன்ஜினியர் ஆகியோரை சுமந்து கொண்டு பத்ரிநாத்திலிருந்து கேதர்நாத்க்கு ஒரு ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்றது.
ஹெலிகாப்டர் மேல் நோக்கி கிளம்பிய சில நொடிகளிலேயே, காற்றழுத்தம் காரணமாக கீழே தள்ளப்பட்டது. இதனால் ஹெலிகாப்டர் கீழே விழுந்தது. அப்போது அதன் றெக்கையில் சிக்கி இன்ஜினியர் பலியானார். மேலும், கான்பூரை சேர்ந்த கோ-பைலட் அல்கா சுக்லா மற்றும் புனேவை சேர்ந்த பைலட் சஞ்சய் வாசி ஆகியோர் காயமடைந்த நிலையில், மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹெலிகாப்டரில் இருந்த 5 பக்தர்களும் அதிருஷ்டவசமாக காயமின்றி உயிரோடு தப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications