For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"லலித் மோடி"... சுஷ்மாவுக்கு மத்திய அரசு, பாஜகவின் முழு ஆதரவு: அருண் ஜெட்லி பேட்டி

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: லலித் மோடி விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு எந்த உள்நோக்கமும் கிடையாது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இருவரும் டெல்லியில் இன்று கூட்டாக பேட்டியளித்தனர்.

Her intention was good: Jaitley on Sushma Swaraj

ராஜ்நாத்சிங்: ஜம்மு காஷ்மீரை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கடந்த ஓராண்டில் காஷ்மீரில் தீவிரவாத நடவடிக்கைகள் 25 சதவீதம் குறைந்துள்ளன.

அருண் ஜெட்லி: லலித் மோடிக்கு வெளிநாடு செல்ல உதவியதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மீது குற்றம்சாட்டுவது அடிப்படை ஆதாரம் இல்லாதது. மத்திய அரசும், பாஜகவும் சுஷ்மாவுக்கு முழு ஆதரவும் அளிக்கிறது. சுஷ்மா எந்த உள்நோக்கமும் இல்லாமல் மேற்கொண்டதுதான் அந்த நடவடிக்கை.

லலித் மோடிக்கு எதிராக அமலாக்கத்துறை விசாரணை நடத்திவருகிறது. 16 வழக்குகளில், 15 வழக்குகளில், லலித் மோடிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

English summary
"All accusations are baseless. She acted bona fide. Her intention was good. The government and party supports her" Jaitley on Sushma Swaraj.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X