காவிரி வரைவு திட்டத்தில் மத்திய அரசு கூறியுள்ள முக்கிய அம்சங்கள் இவைதான்!
Subscribe to Oneindia Tamil
Recommended Video

காவிரி வழக்கில் வரைவு திட்ட அறிக்கை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது- வீடியோ
டெல்லி: காவிரி வரைவு திட்டத்தில் மத்திய அரசால் முன்வைக்கப்பட்டுள்ள அம்சங்களில் முக்கியமானவற்றை இதில் பாருங்கள்.

- காவிரி விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசால், 14 பக்கங்கள் கொண்ட வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
- இந்த அறிக்கையில், ஒரு தலைவர், 9 உறுப்பினர்கள் கொண்ட அமைப்பு உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த அமைப்பின் பெயரை உச்சநீதிமன்றம் முடிவு செய்யும். வாரியமா, ஆணையமா, குழுவா என 3 ஆப்ஷன்களை மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தின் முன்னால் வைத்துள்ளது. உச்சநீதிமன்றம் இதை தீர்மானிக்கும். இந்த அமைப்பு வழக்கில் தொடர்புள்ள அனைத்து மாநில அணைகளின் கட்டுப்பாட்டையும் எடுத்துக்கொள்ளும்.
- மேலாண்மை வாரிய செலவை 4 மாநிலங்கள் ஏற்க வேண்டும் என்று இந்த வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- காவிரி வழக்கில் பிப்ரவரி மாதம் அளித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு தனது வரைவு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
- காவிரி ஒழுங்காற்று குழுவும் அமைக்கப்படும் என்று இந்த வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களும் காவிரி வரைவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
- காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16ம் தேதி உத்தரவிட்டது. கர்நாடகா தேர்தலுக்கு முன்பாக இதில் முடிவெடுத்தால் அந்த மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்று கூறிய மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கால அவகாசம் கேட்டிருந்தது.
- கடந்த 8ம் தேதி காவிரி பிரச்சினை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோதும், நேரம் கேட்டது மத்திய அரசு.
- இதையடுத்து, மே 14ம் தேதி காவிரி வரைவை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, இன்று மத்திய அரசு சீலிட்ட உரையில், உச்சநீதிமன்றத்தில் காவிரி வரைவு திட்டத்தை தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் கோவை மூத்த பெண் வழக்கறிஞர் மோகனா! யார் இவர்? -
ஒரே ட்வீட்.. உதயநிதி, எடப்பாடி டோட்டல் டேமேஜ்.. காவிரி விவகாரத்தில் மாணிக்கம் தாகூர் நறுக் -
எல்லாம் சரிதான்! SIRல் தவறு எதுவும் இல்லை! எல்லா மனுக்களையும் மொத்தமாக தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications