மோடி மாநிலத்தில் ராஜீவ் காந்தியை கடவுளாக வணங்கும் கிராமத்தினர்
வதோதரா: குஜராத்தில் உள்ள கிராமம் ஒன்றில் வசிக்கும் மக்கள் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கடவுளாக வணங்குகிறார்கள்.
குஜராத் மாநிலம் மஹிசாகர் மாவட்டத்தில் உள்ளது சரஸ்வா கிராமம். அந்த கிராமத்தில் வசித்து வரும் பழங்குடியின மக்கள் ஆண்டுதோறும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பெயரில் திருவிழா நடத்தி வருகிறார்கள். அவர்கள் ராஜீவ் காந்தியை கடவுளாக வணங்கி வருகின்றனர்.

தங்கள் வீட்டில் உள்ள சாமி படங்களுக்கு மத்தியில் ராஜீவ் காந்தியின் புகைப்படத்தையும் வைத்து வணங்குகிறார்கள். தங்கள் கிராமம் முன்னேற ராஜீ்வ் காந்தி தான் காரணம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ராஜீவ் வந்து சென்ற பிறகு தான் அவர்கள் கிராமம் முன்னேறியுள்ளதாம்.
1986ம் ஆண்டு மார்ச் மாதம் 22ம் தேதி ராஜீவ் காந்தி சரஸ்வா கிராமத்திற்கு சென்றார். அப்போது அந்த கிராமத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சமாக இருந்தது. ராஜீவ் வருகைக்கு பிறகு சரஸ்வா கிராமத்திற்கு மின்சாரம், நீர், சாலை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது என்று பஞ்சாயத்து தலைவரின் மகன் காந்தி சங்கடா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
ராஜீவ் காந்தி நினைவாக 1987ம் ஆண்டில் இருந்து இந்த திருவிழாவை கொண்டாடி வருகிறோம். ஹோலி பண்டிகைக்கு முன்பு வரும் ஆம்லி அகியராஸ் என்ற புனித நாளில் திருவிழா கொண்டாடப்படுகிறது என்றார்.
கிராமத்தில் உள்ள சிவன் கோவில் அருகே இந்த திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. கோவிலுக்குள் உள்ள சிவன் சிலையின் பாதங்களுக்கு அடியில் ராஜீவின் புகைப்படத்தை வைத்து வணங்குகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications