ஸ்பெக்ட்ரம், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல்களால் கவலை- மன்மோகன்சிங்
Subscribe to Oneindia Tamil

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், ஸ்பெக்ட்ரம், நிலக்கரி ஊழல் குறித்த விஷயங்களில் வெளிப்படையான நிலை கடைப்பிடிக்கப்பட்டது. இவற்றில் முறைகேடு நடந்திருப்பதாக கூறப்படுவது கவலையளிக்கிறது.
ஆனால் ஊழல் தொடர்பான செய்திகளை ஊடகங்களே பூதாகரமாக்கி விட்டன. முறைகேடுகள் தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. தவறு செய்தவர்கள் யாரும் சட்டத்தில் இருந்து தப்பிக்க முடியாது.
9 ஆண்டுகளுக்கு முன் பதவியேற்பதற்கு முன் எவ்வாறு இருந்தேனோ தற்போதும் அப்படியே உள்ளேன். பதவியை பயன்படுத்தி உறவினர்களுக்கோ, நண்பர்களுக்கோ உதவி செய்யவில்லை. வரலாற்றில் எழுதப்படும் போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மீது எந்த ஒரு கறையும் இல்லை என்பது தெளிவாகும் என்றார்.












Click it and Unblock the Notifications