மாட்டிறைச்சி வைத்திருக்கலாம், சாப்பிட கூடாது: மகாராஷ்டிரா ஹைகோர்ட் உத்தரவு
மும்பை: மாட்டிறைச்சி உண்பதற்கு, விற்பனை செய்வதற்கு தடை விதிக்கும் மகாராஷ்டிரா அரசின் முடிவை மும்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அதேநேரம், வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மாட்டிறைச்சியை வீட்டில் வைத்துக் கொள்வது குற்றமல்ல எனத் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் மாட்டிறைச்சி விற்பனைக்கு சமீபத்தில் தடை விதிக்கப்பட்டது. மாட்டிறைச்சி விற்பனை செய்வோருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம், மாட்டிறைச்சி வைத்திருப்போருக்கு ரூ.2000 அபராதமும், ஓராண்டு சிறைத் தண்டனையும் விதிக்கும் சட்டம் அமல் படுத்தப்பட்டது.

இதனை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் சார்பில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த மனுக்கள் அத்தனையும் மொத்தமாக ஹைகோர்ட்டால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
மகாராஷ்டிரா மிருக வதை தடுப்புச் சட்டத்தில் (1976) மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவது, மாட்டிறைச்சி சாப்பிடுவது மட்டுமே தண்டனைக்குரிய குற்றம் என இருப்பதாகவும், மாட்டிறைச்சியை வீட்டில் வைத்திருப்பது குற்றம் என்று அந்த சட்டத்தில் இல்லை எனவும் கூறியுள்ள மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அபய் ஓகா, எஸ்.சி.குப்தே அடங்கிய அமர்வு, அந்த சட்டத்தின் அடிப்படையில் இவ்வாறு தீர்ப்பு வழங்கியுள்ளது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், மகாராஷ்டிரா மாநிலத்துக்கு வெளியில் கொல்லப்பட்ட மாட்டின் இறைச்சியை (பசு, எருது, எருமை) வைத்திருப்பது குற்றம் என்ற சட்டம் தனிநபர் உரிமை மீறுவது ஆகும்.
எனவே மகாராஷ்டிரா மிருக வதை தடுப்புச் சட்டம் 1976-ன் பிரிவு 5-டி ரத்து செய்யப்படுகிறது. அதேவேளையில், இறைச்சிக்காக மாடுகளை வதை செய்வது, மாட்டிறைச்சி உண்பதற்கு, விற்பனை செய்வதற்கு தடை விதிக்கும் மகாராஷ்டிரா அரசின் முடிவை இந்த நீதிமன்றம் உறுதி செய்கிறது, என்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications