அடேங்கப்பா.. திராவிட மாடல்-டெல்லி மாடலை விஞ்சிய காங்கிரஸ்.. இமாச்சல் தேர்தல் வாக்குறுதிகளை பாருங்க!

Subscribe to Oneindia Tamil

சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் நவம்பர் 12ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பெண்களுக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை, வீட்டுக்கு 300 யூனிட் மின்சாரம் வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் திராவிட மாடல், ஆம்ஆத்மி அரவிந்த் கெஜ்ரிவாலின் டெல்லி மாடலையும் விஞ்சும் வகையில் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகளை வழங்கி உள்ளது.

இமாச்சல பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதலமைச்சராக ஜெய்ராம் தாகூர் உள்ளார். சட்டசபைக்காலம் முடிய உள்ளதால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நவம்பர் மாதம் 12ம் தேதி சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுக்கள் டிசம்பர் 8 ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

மும்முனை போட்டி

மும்முனை போட்டி

இமாச்சல பிரதேசத்தில் மொத்தம் 68 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஆட்சியமைக்க 35 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக முனைப்பு காட்டுகிறது. இமாச்சல பிரதேசத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சி வியூகம் வகுத்துள்ளது. மேலும் பஞ்சாப்பை போல் எழுச்சி பெற்று இமாச்சலில் ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மியும் மல்லுக்கட்டி உள்ளது.

தீவிர பிரசாரம்

தீவிர பிரசாரம்

பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இறுதி பட்டியலும் வெளியாகி உள்ளது. இதனால் அந்த மாநிலத்தில் உள்ள 68 சட்டசபை தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் களைக்கட்டி உள்ளது.
மேலும் பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி சார்பில் வேட்பாளர்கள் தங்களின் வெற்றிக்காக தெருதெருவாக, வீடு வீடாகவும் சென்று ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளர் ராஜீவ் சுக்லா, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், பிரச்சார குழு தலைவர் சுக்விந்தர் சிங் சுகு மற்றும் காங்கிரஸ் மாநில தலைவர் பிரதீபா சிங் உள்ளிட்டவர்கள் கூட்டாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

பெண்களுக்கு மாதம் ரூ.1,500

பெண்களுக்கு மாதம் ரூ.1,500

இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் 18 முதல் 60 வயது வரையிலான பெண்களுக்கு மாதந்தோறும் ரூ1,500 உதவித்தொகை வழங்கப்படும். வீட்டுக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். மேலும் வீடு ஒன்றுக்கு 4 மாடுகள் வாங்க மானியம் வழங்கப்படும். மாநிலத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும். மாநிலம் முழுமைக்கும் நடமாடும் கிளினிக்குகள் உருவாக்கப்படும்.

ஒரு லட்சம் அரசு வேலைகள்

ஒரு லட்சம் அரசு வேலைகள்

மாநிலத்தில் அரசு பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்ப்படும். முதல் அமைச்சரவை கூட்டத்தின் மூலம் ஒரு லட்சம் அரசு வேலைகள் வழங்கப்படும். ஒவ்வொரு தொகுதியிலும் ரூ.10 கோடியில் இளைஞர்களுக்கு உதவும் வகையில் 'ஸ்டார்ட்அப் பண்ட்' நிதி மையம் திறக்கபப்டும். சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக ஸ்மார்ட் வில்லேஜ் திட்டம் செயல்படுத்தப்படும் என்பன போன்ற பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

திராவிட மாடலை விஞ்சியது

திராவிட மாடலை விஞ்சியது

இந்த தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் நடக்கும் திமுகவின் ‛திராவிட மாடல், டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ‛டெல்லி மாடல்' ஆகியவற்றை விஞ்சிய நிலையில் அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. அதாவது தமிழகத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்குவதாக திமுக அரசு அறிவித்தது. இது இன்னும் நடைமுறைக்கு வராத நிலையில் இமாச்சலில் பெண்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. மேலும் டெல்லியில் இலவசமாக 200 யூனிட்டும், பஞ்சாப்பில் 300 யூனிட் மின்சாரத்தை ஆம்ஆத்மி அரசு வழங்கி வரும் நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் டெல்லி மாடலை விஞ்சியும், பஞ்சாப் ஆம்ஆத்மி மாடலுக்கு நிகராகவும் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+