For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திடீர் ட்விஸ்ட்.. இமாச்சலில் காங்கிரஸ் ஆட்சி.. பாஜகவுக்கு பெரியஅடி.. மாறிப்போன கருத்து கணிப்புகள்

Google Oneindia Tamil News

சிம்லா: இமாச்சல பிரதேச மாநிலத்தில் தேர்தலில் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் அங்கு கருத்து கணிப்புகளை தாண்டி காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி 40 இடங்களில் வென்று பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றி உள்ளது.

இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள 68 சட்டபை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த மாதம் 12ம் தேதி தேர்தல் நடந்தது. ஆட்சியை பிடிக்க 35 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டி உள்ளது.

இந்த தேர்தலில் மாநிலத்தை ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம்ஆத்மி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. மொத்தம் 412 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

காங்கிரசுக்கு சம்மட்டி அடி! குஜராத்தில் வாக்குகளை பிரித்த ஆம் ஆத்மி.. பாஜகவிற்கு காங்கிரசுக்கு சம்மட்டி அடி! குஜராத்தில் வாக்குகளை பிரித்த ஆம் ஆத்மி.. பாஜகவிற்கு

தபால் ஓட்டில் பாஜக முன்னிலை

தபால் ஓட்டில் பாஜக முன்னிலை

இந்த தேர்தலக்கான ஓட்டுப்பதிவு கடந்த மாதம் 12ம் தேதி 7,881 வாக்குச்சாவடிகளில் விறுவிறுப்பாக நடந்தது. மொத்தம் 75.6 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின. இந்த இந்த ஓட்டுக்கள் இன்று 59 இடங்களில் உள்ள 68 ஓட்டுச்சாவடி மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. இதில் காங்கிரஸ் கட்சியை பின்னுக்கு தள்ளி பாஜக முன்னிலை வகித்தது. தபால் ஓட்டுக்களை பொறுத்தமட்டில் பல தொகுதிகளில் பாஜகவினர் முன்னிலையில் இருந்தனர்.. இமாச்சல பிரதேச மாநில முதலமைச்சர் ஜெய்ராம் தாகூர் செராஜ் தொகுதியில் முன்னிலையில் இருந்தது.

மாறி மாறி முன்னிலை

மாறி மாறி முன்னிலை

இதன் தொடர்ச்சியாக ஓட்டுப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு வருகின்றனர். அதன்படி காலை 9 மணி நிலவரப்படி இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்தது. காங்கிரஸ் கட்சி மொத்தம் 28 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. பாஜக 23 தொகுதிகளிலும், ஆம்ஆத்மி 5 இடங்களிலும் முன்னிலை பெற்றன. இமாச்சலில் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதனால் தொகுதிகளின் முன்னிலை நிலவரம் மாறிமாறி அமைந்தது. மாநிலத்தில் புதிய ஆட்சியை அமைப்பது பாஜகவா?, காங்கிரஸா? என்பதை கணிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

ஆட்சியை பிடித்த காங்கிரஸ்

ஆட்சியை பிடித்த காங்கிரஸ்

இந்நிலையில் இன்று மாலையில் முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியாகின. அதில் இமாச்சல பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக 25 இடங்களிலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் வாகை சூடினர். இமாச்சல பிரதேசத்தில் மொத்தம் 68 தொகுதிகள் உள்ள நிலையில் ஆட்சியமைக்க 35 இடங்களில் வெற்றி கட்டாயமாகும். இதனால் காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் இமாச்சல பிரதேசத்தின் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அமைந்துள்ளது.

மாறிய கருத்து கணிப்புகள்

மாறிய கருத்து கணிப்புகள்

இமாச்சல பிரதேசத்தை பொறுத்தமட்டில் ஒவ்வொரு முறையும் ஆட்சி மாற்றம் என்பது நிகழ்ந்து வருகிறது. இருப்பினும் இந்த முறை பாஜக 2வது முறையாக தொடர்ந்து ஆட்சியை பிடிக்கும் என பாஜக தலைவர்கள் கூறினார். மேலும் இதனை தான் தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்து கணிப்புகள் வெளிப்படுத்தின. இருப்பினும் பாஜகவை பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. இதன்மூலம் கருத்து கணிப்பு முடிவுகள் அப்படியே மாறிஉள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Congress party is leading in Himachal Pradesh as of 9 am. Out of total 68 constituencies, Congress is leading in 28 seats while BJP is leading in 23 seats. Aam Aadmi Party is leading in only 5 seats.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X