ஆரம்பத்தில் ‘ஷாக்’.. விட்டதை பிடித்த இமாச்சல் காங்கிரஸ் முதலமைச்சரின் மனைவி.. மொத்தமாக சறுக்கிய பாஜக
சிம்லா: இமாச்சல பிரதேச மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சுகுவின் மனைவி கம்லேஷ் தாக்கூர், இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் பின்னடைவைச் சந்தித்து வந்த நிலையில் தற்போது வெற்றி பெற்றுள்ளார்.
ஏழு மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஜூலை 10ஆம் தேதி நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர்களின் மரணம் மற்றும் ராஜினாமாவால் ஏற்பட்ட காலியிடங்கள் காரணமாக நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு முதன்முறையாக இந்த இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி தொகுதிக்கும், பீகாரில் ரூபாலி தொகுதிக்கும், மேற்கு வங்கத்தில் ராய்காஞ்ச், ராணிகஞ்ச், பாக்தாத் மாணிக்தலா தொகுதிகளுக்கும், மத்தியபிரதேசத்தில் அமர்வாரா, உத்தரகாண்ட் மாநிலத்தில் பத்ரிநாத், மங்களூர், பஞ்சாப்பில் ஜலந்தர் மேற்கு, இமாச்சலபிரதேசத்தில் டெஹ்ரா, ஹமிர்பூர், நலகர் ஆகிய தொகுதிகளுக்கு கடந்த 10 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
இமாச்சல பிரதேசத்தில் சுக்விந்தர் சிங் சுகு தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். தொடர்ந்து அன்றைய தினமே பாஜவில் இணைந்தனர்.
இதையடுத்து காலியான 3 தொகுதிகளுக்கும் ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. டெஹ்ரா, ஹமிர்பூர், நலகர் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு புதன்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. டெஹ்ரா தொகுதியில் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவின் மனைவி கமலேஷ் தாக்கூர் போட்டியிட்டார்.
டெஹ்ரா தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் ஹோஷ்யர் சிங் முன்னிலையில் இருந்தார். இரண்டாவது இடத்தில் காங்கிரஸின் கமலேஷ் தாக்கூர் பின்தங்கினார். இந்நிலையில், அடுத்தடுத்த சுற்றுகளில் காங்கிரஸ் வேட்பாளர் கமலேஷ் தாக்கூர் முந்தினார்.
தற்போது, காங்கிரஸ் வேட்பாளர் கம்லேஷ் தாக்கூர், 32,737 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ஹோஷ்யார் சிங் 23,338 வாக்குகளும் பெற்றுள்ளனர். 9,399 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் கம்லேஷ் தாக்கூர்.
இமாச்சல பிரதேசத்தின் ஹமிர்பூர் தொகுதியில், பாஜகவின் ஆஷிஷ் சர்மா முன்னணியில் உள்ளார். நலகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் ஹர்தீப் சிங் பவா முன்னிலை வகிக்கிறார். ஒட்டுமொத்தமாக 13 தொகுதி இடைத்தேர்தலில் 11 தொகுதிகளில் இந்தியா கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
-
சீட் ஒதுக்கப்பட்ட பிறகு அப்செட்.. அதிமுக கூட்டணியில் இருந்து விலகல்? புரட்சி பாரதம் இன்று முடிவு! -
“வருத்தத்தில் இருக்கிறேனா? வதந்தியை பரப்பாதீங்க.. நம்பிக்கை இருக்கு!” - சீனுக்குள் வந்த கவுதமி -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
ரூ.500 நோட்டு ரத்தாகிறதா! தமிழக ஏடிஎம்களில் வெறும் 100 ரூபாய் மட்டும் வருதே? பின்னணி அரசியல் ரகசியம் -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
அவிநாசி, ஊட்டி, நாகர்கோவில்! அதிமுக கோட்டைகளை பாஜகவுக்கு தாரை வார்ப்பதா? கொந்தளிக்கும் நிர்வாகிகள் -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications