Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரொம்பவே மோசம்..இமாச்சல் தோல்வியிலும் தப்பிய பாஜக ஜேபி நட்டா! வசமாய் சிக்கிய மத்திய அமைச்சர்! அடடா

Subscribe to Oneindia Tamil

சிம்லா: இமாச்சல பிரதேச மாநில தேர்தலில் பாஜக தோல்வியடைந்த நிலையில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா தப்பிய நிலையில், முன்னாள் பிசிசிஐ தலைவரும், தற்போதைய மத்திய அமைச்சருமான அனுராக் தாகூர் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ள விஷயம் தற்போது வெளியாகி உள்ளது.

கடந்த 2019 முதல் இந்தியாவில் நடந்த பல்வேறு மாநில தேர்தல்களில் பாஜக தான் ஆட்சியில் இருந்த மாநிலங்களை மீண்டும் கைப்பற்றி வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாஜக ஆட்சியில் இருந்த உத்தர பிரதேசம், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் மாநிலங்களுக்கு தேர்தல் நடந்தது. இதில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.

இந்த மாநிலங்களுடன் பஞ்சாப்புக்கும் தேர்தல் நடந்தது. இதில் ஆம்ஆத்மி கட்சி வெற்றி பெற்று காங்கிரஸிடம் இருந்து ஆட்சியை பறித்தது. பஞ்சாப்பில் பாஜக வழக்கம்போல் ஜொலிக்காமல் போனது.

 இமாச்சல்-குஜராத் தேர்தல்

இமாச்சல்-குஜராத் தேர்தல்

இதன் தொடர்ச்சியாக தான் இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டு நடந்தன. இதில் குஜராத்தில் கடந்த 27 ஆண்டுகளாகவும், இமாச்சலில் கடந்த 5 ஆண்டுகளாகவும் பாஜக ஆட்சியில் இருந்தது. இதனால் இருமாநிலங்களிலும் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வருமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த 2 மாநிலங்களில் பதிவான ஓட்டுக்கள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

குஜராத்தில் மீண்டும் பாஜக வெற்றி

குஜராத்தில் மீண்டும் பாஜக வெற்றி

இதில் குஜராத்தில் பாஜக சாதனை வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 186 தொகுதிகளில் பாஜக 156 தொகுதிகளில் வாகை சூடியது. காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி 5 தொகுதிகளிலும், மற்றவர்கள் 4 இடங்களிலும் வெற்றி பெற்றனர். குஜராத் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் சொந்த மாநிலம் என்பதால் இந்த தேர்தல் கவுரவ பிரச்சனையாக இருந்தது. இருப்பினும் கடந்த தேர்தலைவிடவும், பாஜக வரலாற்றில் இல்லாத வகையிலும் அதிக இடங்களில் பாஜக வென்று அரியனையை பிடித்துள்ளது.

இமாச்சலில் பாஜக தோல்வி

இமாச்சலில் பாஜக தோல்வி

ஆனால் இமாச்சல பிரதேசத்தில் பாஜக தோல்வியடைந்துள்ளது. இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள 68 சட்டபை தொகுதிகள் உள்ளன. ஆட்சியை பிடிக்க 35 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். நேற்றைய ஓட்டு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களிலும், பாஜக 25 இடங்களிலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றனர். இதன்மூலம் இமாச்சலில் கடந்த 5 ஆண்டுகளாக நடந்த பாஜகவின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. முதலமைச்சராக இருந்த ஜெய்ராம் தாகூர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸ் கட்சி முதலமைச்சரை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

அனுராக் தாகூருக்கு சிக்கல்

அனுராக் தாகூருக்கு சிக்கல்

இந்நிலையில் தான் இமாச்சல பிரதேச மாநிலத்தின் சட்டசபை தேர்தல் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா மற்றும் மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக உள்ள அனுராக் தாகூர் ஆகியோருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் இமாச்சல பிரதேச தான் இவர்களின் சொந்த மாநிலமாகும். இவர்கள் 2 பேரும் தான் வேட்பாளர்கள் தேர்வு, பிரசார வியூகம் உள்பட அனைத்தையும் வகுத்து வந்தனர். பாஜக தேசிய தலைவர் என்ற முறையில் ஜேபி நட்டா செயல்பட்ட நிலையில் அனுராக் தாகூர் மாநில பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டார். இமாச்சலில் பாஜக அடைந்த தோல்வி என்பது ஜேபி நட்டாவை விட அனுராக் தாகூருக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பின்னணியில் முக்கிய காரணம் உள்ளது.

5 தொகுதிகளில் பூஜ்ஜியம்

5 தொகுதிகளில் பூஜ்ஜியம்

அதாவது அனுராக் தாகூர் இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஹமிர்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்பியாகி மத்திய அமைச்சர் பதவியில் உள்ளது. இவரது ஹமிர்பூர் தொகுதியில் மொத்தம் 5 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தற்போது நடந்த தேர்தலில் இந்த 5 தொகுதிகளிலும் பாஜக தோல்வியடைந்துள்ளது. இங்குள்ள சுஜான்பூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் ராஜிந்தர் சிங் 399 ஓட்டுகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்றார். போரான்ஜ் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சுரேஷ் குமார் 60 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை வீழ்த்தினார். நாடான் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சுக்விந்தர் சுகு (காங்கிரஸில் முதல்வராக வாய்ப்புள்ள நபர்) வெற்றி பெற்றார். ஹமிர்பூர் தொகுதியில் சுயேச்சையாக களமிறங்கிய ஆசிஷ் சர்மா வெற்றார். இவர் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட அதிருப்தியால் சுயேச்சையாக இறங்கி வாகை சூடியுள்ளார். அதேபோல் பர்சார் தொகுதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த லகான்பால் வெற்றி பெற்றார்.

வலைதளங்களில் விமர்சனம்

வலைதளங்களில் விமர்சனம்

மொத்தத்தில் அனுராக் தாகூரின் ஹமிர்பூர் நாடாளுமன்ற தொகுதியில் 5 சட்டசபை தொகுதிகளில் 4ல் காங்கிரஸ் கட்சியும் ஒன்றில் சுயேச்சை வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் 5 தொகுதிகளிலும் பாஜக தோல்வியடைந்துள்ளது. இதுதான் தற்போது அனுராக் தாகூருக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. அனுராக் தாகூரை பாஜக கட்சியினர் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். சொந்த மாவட்டத்தில் கட்சியை வெற்றி பெற வைக்க தவறியதாக கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

யார் இந்த அனுராக் தாகூர்?

யார் இந்த அனுராக் தாகூர்?

தற்போது மத்திய அமைச்சராக உள்ள அனுராக் தாகூர் இந்திய கிரிக்கெட்கட்டுபாட்டு வாரியம் (பிசிசிஐ) தலைவராக இருந்தார். அதன்பிறகு எம்பியான இவர் மத்திய நிதி மற்றும் விவகாரத்துறை இணையமைச்சராக செயல்பட்டார். தற்போது மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக உள்ளார். இவரது தந்தை பெயர் பிரேம் குமார் துமால். இவர் இமாச்சல பிரதேச மாநிலத்தில் பாஜக சார்பில் 2 முறை முதலமைச்சராக இருந்தார். கடந்த 2017 தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக பிரேம் குமார் களமிறக்கப்பட்டார். சுஜான்பூர் தொகுதியில் களமிறங்கிய பிரேம் குமார் தோல்வியடைந்தார். தற்போது 78 வயது நிரம்பி உள்ள பிரேம் குமார் துமலுக்கு பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தப்பித்த ஜேபி நட்டா

தப்பித்த ஜேபி நட்டா

அனுராக் தாகூரை பாஜகவினர் விமர்சனம் செய்யும் நிலையில் தான் ஜேபி நட்டா தற்போது தப்பித்துள்ளார். அதாவது ஜேபி நட்டா ராஜ்யசபா எம்பியாக உள்ளார். இவர் இமாச்சல பிரதேசத்தில் உள்ள பிலாஸ்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இந்த மாவட்டத்தில் மொத்தம் 4 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் 3 தொகுதிகளில் பாஜகவினரும், ஒரு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் ஜேபி நட்டாவை பாஜகவினர் வெளிப்படையாக விமர்சனம் செய்யவில்லை. இருப்பினும் இமாச்சலில் பாஜக தோல்விக்கு அவரும் ஒரு காரணம் என்ற குற்றச்சாட்டு பொதுவானதாக உள்ளது.ஏனென்றால் மொத்தம் 22 தொகுதிகளில் அதிருப்தியாளர்கள் பாஜக வேட்பாளர்களுக்கு எதிராக களமிறங்கி ஓட்டுக்களை பிரித்தனர். இது பாஜகவுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தான் தேர்தல் தோல்விக்கு ஜேபி நட்டாவையும் காரணம் என கூறும் நபர்கள் வெளிப்படையாக அவரை விமர்சனம் செய்யவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+