ஆண் குழந்தை பொறக்கலையாம்.. ஆத்திரத்தில் பெண் சிசுவின் வாயினுள் விரலை விட்டே கொன்ற கொடூர தந்தை
பெண் குழந்தையை கையாலேயே கொன்று புதைத்த தந்தையை போலீசார் கைது செய்தனர்
சிம்லா: ஆண் குழந்தை பிறக்கலையாம்... அதனால் பிறந்துவிட்ட பச்சிளம் பெண் குழந்தையின் வாயினுள் விரலைவிட்டு, கொன்ற கொடூரம் ஹிமாச்சலப் பிரதேசத்தில் நடந்துள்ளது.
வடமாநிலங்களில் நாளுக்கு நாள் வன்முறைகள் பெருகி கொண்டிருக்கின்றன... லாக்டவுன் என்றாலும்கூட இந்த வன்முறை சம்பவங்களின் எண்ணிக்கைகளும், கொடூரங்களும் நடந்த படியே உள்ளன.

பெரும்பாலும், படிப்பறிவில்லாத கிராமங்களில்தான் இந்த அக்கிரமம் நடக்கிறது.. மேலும் பழமையிலும், மூடநம்பிக்கையிலும் பின்தங்கிவிட்டதால், பெண் குழந்தைகள், மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் பெரிதும் கவலைக்கு உள்ளாக்கவே செய்து வருகின்றன.
அப்படி ஒரு சம்பவம் ஹிமாச்சல பிரதேசத்தில் நடந்துள்ளது.. மண்டி மாவட்டத்தில் நாஸ்லோ என்ற கிராமம் உள்ளது.. இங்கு வசித்து வந்த தம்பதி ஹரிஷ் குமார் - மீனாதேவி.. மீனாதேவிக்கு 27 வயசாகிறது.
கல்யாணம் ஆகி 8 வருஷம் ஆகிறது.. 7 வயதில் ஒரு மகனும், 4 வயதில் ஒரு மகளும் இந்த தம்பதிக்கு இருக்கிறார்கள்.. ஆனால், கல்யாணம் ஆன நாளில் இருந்து ஹரிஷ்குமார் மீனாவை கொடுமைப்படுத்தியபடியே வந்திருக்கிறார்.. சண்டை வரும்போதெல்லாம் அவரை சரமாரி அடித்து மிருகம்போல நடந்து கொள்வாராம்.
2 குழந்தைகளுக்காக அனைத்தையும் மீனா பொறுத்து போயுள்ளார். இந்த நிலையில், மீனாவுக்கு கடந்த புதன்கிழமை மறுபடியும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.. ஆனால் ஹரிஷ்-க்கு ஆண் குழந்தைதான் வேண்டும் என்று சொல்லி கொண்டே இருந்தாராம்.. மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தவர், மறுபடியும் பெண் குழந்தை பிறந்துவிட்டது என்று கேட்டதுமே டென்ஷன் ஆகிவிட்டார்.
அதனால் நேராக மீனாவிடம் சென்று, பக்கத்தில் படுத்து கொண்டிருந்த பச்சிளம் குழந்தையை எடுத்து, தலைகீழாக தொங்கவிட்டு அந்த குழந்தையின் வாயினுள் விரலையும் விட்டு கொலையும் செய்துள்ளார்... அதற்கு பிறகு அந்த குழந்தையை அவரே வெளியே தூக்கி சென்று விட்டு, கொஞ்ச நேரத்தில் மீனாவிடம் வந்து, "அந்த குழந்தையை அடக்கம் செய்துட்டேன்" என்றாராம்.
இதை கேட்ட அதிர்ந்த மீனா, கணவன் மீது போலீசில் புகார் தந்துள்ளார்.. இதையடுத்து ஹரிஷை போலீசார் கொத்தாக தூக்கி சென்று விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் இமாச்சல பிரதேசத்தில் பெரும் பரபரப்பை தந்து வருகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications